தேன் கரடி (Sloth bear) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் காடுகளில் காணப்படுகின்ற ஒரு கரடியாகும். இது ஒரு இரவாடி, பூச்சியுண்ணிக் கரடி ஆகும். இலங்கையில் உள்ள கரடி இதன் துணையினமாகக் கருதப்படுகிறது. இந்தக் கரடிக்குத் தலை பெரிதாகவும், முகம் துருத்தியபடி நீண்டு முக்கோணவடிவில் இருக்கும். இதற்குப் பறட்டை போன்ற நீண்ட கரிய முடியும், மார்பில் v வடிவ வெண்ணிற குறியும் கொண்டிருக்கும். கால் பாதங்கள் தட்டையாகவும், விரல்களில் முன்புறம் வளைந்த நீண்ட நகங்களும், இருக்கும். இவற்றின் பாதச்சுவடுகள் மனிதனின் பாதச்சுவடுகள் போல இருக்கும். இது பழங்கள் பூக்கள், வேர்த்தண்டுகள், தேன், எறும்புகள், பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது.
தமிழில் இதனை அசையாக் கரடி என்பர். இதன் கால்களில் மூன்று விரல்கள் இருக்கும். இது சோம்பேறித்தனம் கொண்டது. மரத்தில் மெதுவாக ஏறும்; இறங்கும். வாழ்நாளில் பெரும்பகுதியை மரக்கிளைகளில் தூங்கியே கழிக்கும். உண்ட உணவு செரிமானம் ஆகப் பல மணி நேரம் ஆவதால் இது இவ்வாறு வாழும்.