இந்திய பாலைவனப் பூனை அல்லது காட்டுப் பூனை (Indian desert cat) என்பது ஒரு சிறிய பூனை ஆகும். இது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இந்தியா, மேற்கு சீனா, மங்கோலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் அழகிய தோலுக்காக பெருமளவு வேட்டையாடப்படுகிறது. இதனால் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று, செம்பட்டியலில் 2002 ஆண்டு இடம் பெற்றது. இவை இந்தியாவில் இராஜஸ்தான், கட்ச், மத்திய இந்தியாவின் புதர் காடுகள் ஆகிய இடங்களில் வாழ்கிறது.
பண்புகள்
இது மற்ற பூனை இனங்களை ஒப்பிடும்போது சிறியது, உருவத்தில் வீட்டுப்பூனையைப் போன்று தோற்றமளிக்கும். ஆனால் வீட்டுப் பூனையை விட பெரியது. மங்கிய மஞ்சல் கலந்த உடலும், அதன்மீது கரும்புள்ளிகளும் காணப்படும். இதன் வால் நீளமானது வாலின் பின்பகுதியில் கருவளையங்களும், இரண்டு கிடையான கருப்பு பட்டைகளும் காணப்படும். ஆண் பூனைகள் உடல் நீளம் 43 -91 செமீ (17 – 36 அங்குலம்) ஆகும். பொதுவாக வால் 23 முதல் 40 செமீ (9.1 -15.7 அங்குலம்) நீளம் இருக்கும். 5 முதல் 8 கிலோ (11 18 பவுண்டு) எடையுடனும் இருக்கும். பெண் பூனைகள் ஆண் பூனைகளைவிட சிறியதாக இருக்கும். பெண் பூனைகள் உடல் நீளம் 40 முதல் 77 செ.மீ (16-30 அங்குலம்) வால் 18 முதல் 35 செமீ (7.1 -13.8 அங்குலம்) நீளம் கொண்டவை. எடை 3 முதல் 5 கிலோ எடையுள்ளவை.
வெளி இணைப்புகள்
இந்தியப் பாலைவனப் பூனை – விக்கிப்பீடியா