அடெலிடா (Adelita) என்பது வட பசிபிக் பெருங்கடலில் கடலடித்தளத்தில் முதன்முதலில் கண்காணிக்கப்பட்ட ஒரு கடலாமையின் பெயர் ஆகும். ஒரு ஆராய்ச்சித் திட்டத்திற்காக 1996 ஆம் ஆண்டு ஜே. நிக்கோல்சால் அலிடா என்று பெயர் சூட்டப்பட்ட பெண் பெருந்தலைக் கடலாமை மீது ஒரு உயிரின கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது.
அடெலிடா பேராமை கண்காணிப்பு திட்டமானது பசுபிக் கடற்பகுதியில் கடலாமைகளின் இடம்பெயர்வுக்கான முதல் சான்றை அளித்தது. கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டு கடலில் நீந்திச்சென்ற முதல் விலங்கு அலிடா ஆகும்.
இந்த அலிடா ஆமையானது ஆய்வுக்காக மெக்சிகோ நாட்டின் பஜகலிபோர்னியோ கடல் பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து அது 9,000 மைல் தூரம் பயணம் மேற்கொண்டதை பிபிஎஸ் இயற்கை ஆவணப்படததின் வாயேஜ் ஆஃப் தி லோன்லி டர்ட்டில் இடம்பெற்றது. இந்த பயணத்தில் இந்த ஆமை தான் பிறந்த யப்பானுக்ககே முட்டையிடுவதற்காக திரும்பி வந்ததை ஆவணப்படம் பின்தொடர்ந்து வந்து காட்டியது.