செதிற்புழுக்கள்

செதிற்புழுக்கள் (Amphisbaenia) என்பன கால்களற்ற, செதிலுடைய புழுபோன்ற உருவுடைய பல்லி, பாம்பு இனத்துக்கு நெருக்கமான ஓரு வகையைச் சேர்ந்த உயிரினத் துணைவரிசை. இத்துணைவரிசையில் 130 வாழும் உயிரின வகைகள் உள்ளன/ ஆங்கிலத்தில் இதனை “புழுப்பல்லிகள்” என்று பொருள்படும்”worm lizards” என்றும் குறிக்கின்றனர். இவ்வுயிரின வகையில் பலவும் இளஞ்சிவப்பு நிறமு, வளையம் வளையமாக அமைந்த செதிள்களும் கொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் மண்புழு போல் தோற்றம் அளிக்கும். இவ்வுயிரினத்தில் உள்ள விலங்குகளைப் பற்றி, அவற்றின் உடற்கூறு தவிர்த்த பிற உண்மைகள் அவ்வளவாக நன்றாக அறியப்படவில்லை. இவை பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலும் (கரையை ஒட்டிய பகுதிகளிலும்), தென்னமெரிக்காவிலும் காணப்படுகின்றது. இவை உருவில் மிகவும் சிறியதாகவும் இருக்கும். மிகப்பெரும்பாலானவை 150 மிமீ நீளத்துக்கும் குறைவாகவே இருக்கும்


விரிவரைவு


மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வளர்ச்சியடையாத பாம்புபோலவோ மண்புழு போலவோ தோற்றம் அளித்தாலும், இவை மற்ற ஊர்வனவற்றில் இருந்து பிரித்தறிய சிறப்பான கூறுகள் கொண்டிருக்கின்றன. உடலுள் வலப்புறம் நுரையீரல் இதன் ஒல்லியான உடலுக்கு ஏற்ப சிறிதாய் அமைந்துள்ளது, பாம்புகளில் இடப்புறம் நுரையீரல் இப்படி இருக்கும். இவற்றின் மேற்தோல் புற அமைப்பும் மற்ற செதிளூர்வன (squamata) விலங்குகளில் இருந்து மாறுபட்டு அமிந்துள்ளது. மரபணு அடிப்படையிலும், தொல்லுயிர் எச்சங்களின் செய்திகளில் இருந்தும், இவை பாம்போடு தொடர்பற்ற வகையில் கால்களை இழந்துள்ளன (மருவி மாறியுள்ளன) என்று அறிய முடிகின்றது .


இதன் தலை கெட்டியானது, கழுத்தில் இருந்து உருவானதல்ல, இதன் தலையின் பெரும்பகுதி திடமான எலும்பால் ஆனது; இதற்கு வெளிப்புறமாக காதுகள் ஏதும் இல்லை. இவற்றின் கண்கள் உட்குழிந்து அமைதுள்ளது, அவை தோலால் மூடப்பட்டும் உள்ளன. இதன் வால் முடியும் இடத்தில் பார்ப்பதற்குத் தலை போலவே இருக்கும். இதன் அறிவியற்பெயர் “Amphisbaena” சில தொன்மங்களில் கூறப்படும் இருண்டு முனையிலும் தலை உள்ள பாம்பைப் பின்பற்றி அமைந்தது. Amphisbaena என்பது கிரேக்கச் சொல்லான ἀμϕίσβαινα என்பதில் இருந்து பெற்றது, இதில் ἀμϕίς (ஆம்ஃபிசு, amphi) என்றால் “இரண்டு விதமாகவும்” (both ways) என்று பொருள், βαίν (பை’ன், baene, bene ) என்பது “போ, போகுதல்” என்னும் பொருள் உடையது. இந்த கிரேக்கச்சொல்லின் பிரான்சிய சொல்வடிவம் amphisbène என்பதாகும். இதன் பொருள் தமிழில் “இருவிதநகரி” என்பதாகும்.


வெளி இணைப்புகள்

செதிற்புழுக்கள் – விக்கிப்பீடியா

Amphisbaenia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *