ஆண்டர்சன்ஓடைப் பாம்பு (Anderson’s stream snake)(ஒபிசுதோடுரோபிசு ஆண்டர்சோனி), என்பது பொதுவாக ஆண்டர்சன் மலை பின்செதில் பாம்பு என அறியப்படுகிறது. இது பாம்பு குடும்பமான கோலுபிரிடேவினைச் சார்ந்தது. இந்த பாம்புகள் ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
சொற்பிறப்பியல்
சிற்றினப் பெயரான ஆண்டெர்சோனி இசுக்கொட்லாந்தினைச் சார்ந்த ஊர்வன அறிவியலாளர் ஜான் ஆண்டர்சனின் நினைவாக இடப்பட்டது.
புவியியல் வரம்பு
ஓ. ஆண்டர்சோனி ஹாங்காங் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
வாழ்விடம்
ஓ. ஆண்டர்சோனியின் விருப்பமான இயற்கை வாழ்விடங்கள் 300–900 m (980–2,950 ft) உயரத்தில் உள்ள காடு மற்றும் நன்னீர் ஈரநிலங்கள் ஆகும்.
விளக்கம்
ஓ. ஆண்டர்சோனி முதுகுபுறம் கருப்பு ஆலிவ் நிறத்திலும் வயிற்றுப்பகுதி வெண்மை நிறத்திலும், கன்னம் மற்றும் கீழ் உதடு பழுப்பு நிறமுடையது. மூஞ்சுப்பகுதி குறுகி, அகன்று, தட்டையாகக் காணப்படும். ஒரு ஒற்றை முன்னெற்றி தகட்டுடன், ஒரு இணை கன்னம் கவசங்களுடன் காணப்படும்.
உடலின் முழு நீளம் முழுவதும் 17 வரிசைகளில் முதுகுபுற செதில்கள் போர்த்தப்பட்டிருக்கும். கழுத்துப் பகுதியில் மென்மையாகவும், நடு உடல் பகுதியில் மெலிந்த மூட்டுடனும், வால் பகுதியில் வலுவான மூட்டுடன் செதில்கள் காணப்படும். முதிர்ச்சியடைந்த ஓ. ஆண்டர்சோனியின் மொத்த நீளம் (வால் உட்பட) 38–46 cm (15–18 in) ஆகும். வாலின் நீளம் மொத்த நீளத்தில் 15 முதல் 20% ஆகும்.
இனப்பெருக்கம்
ஓ. ஆண்டர்சோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகையின.