ஓடுகாலிப்பாம்பு (Argyrogena fasciolata) என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு இனமாகும்.
புவியியல் எல்லை
இப்பாம்புகள் இந்தியாவில் வட வங்காளம், காஷ்மீர் போன்ற இடங்களைத்தவிர அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இலங்கை, பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பாம்பு பழுப்பு நிறமுடைய பாம்பு ஆகும். கழுத்தைவிட அகன்ற தலையும், கூர்மையான மூக்கும் கொண்டது. வழுவழுப்பான செதில்கள் கொண்டது. சிறிய பாம்புகளுக்கு உடலில் பிரகாசமான வெள்ளை நிற வரிப்பட்டைகளும், தலையில் நன்கு தெரியும் வெண்ணிறக் குறிகளும் இருக்கும். அடிப்பகுதி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இப்பாம்பின் மொத்த நீளம் 1060 மிமீ (3.5 அடி); இதில் வால் 220 மிமீ (8.5 அங்குலம்) இருக்கும்.
வெளி இணைப்புகள்
ஓடுகாலிப்பாம்பு – விக்கிப்பீடியா