எண்ணெய்ப் பனையன் (Banded kukri snake) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இது இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், பர்மா, தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
இப்பாம்புகள் செந்நிறத்திலோ அல்லது சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலோ இருக்கும். பளபளப்பான செதில்களுடன், கூரற்ற தலை கொண்டு இருக்கும். இதன் கண்மணிகள் உருண்டையாக நன்கு புலப்படும்வகையில் இருக்கும். இதன் உடலில் கருப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் பட்டைகள் இருக்கும். தலை மேலே உள்ள பட்டைகள் அம்புக் குறி போன்று தெளிவாகக் காணப்படும். உடலின் அடிப்பகுதி வெளுத்துக் காணப்படும். பல்லி போன்ற இதன் இரைகளைப் பிடிக்க ஏதுவாக இதற்கு வளைந்த கூரியபற்கள் இருக்கும்.
இப்பாம்பின் மொத்த நீளம் 24 அங்குலமும், வால் 3.5 அல்குலமும் இருக்கும். (பெண் பாம்பு 640 மிமீ, வால் 100 மிமீ)
இப்பாம்புகள் இந்தியா, நேபாள இமயமலைப் பகுதிகளில் 4100 அடி உயரம்வரை உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.