இந்திய உடும்பு அல்லது வங்காள உடும்பு என்பது ஒரு உடும்பு ஆகும். இது பரவலாக இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. அதே போல் தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா பாகங்களிலும் காணப்படுகிறது. இவை ஒரு தரைவாழி ஆகும். இவை தலை முதல் வால் இறுதிவரை 175 செமீ நீளம்வரை வளர்கிறது. இதன் உடலில் மங்கலான கரிய கோடுகள் தென்படும். தலைப்பகுதியில் அமைந்த செதில்கள் பெரியதாக அமைந்திருக்கும். பற்கள் நீண்டு கூர்மையாக இருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக நீண்டு பிளவுபட்டுக் காணப்படும். இவை சிறிய முதுகெலும்பிகள், தரைப்பறவைகள், முட்டைகள், மீன்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இதன் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
வெளி இணைப்புகள்
இந்திய உடும்பு – விக்கிப்பீடியா