இருதலைப்பாம்பு

மண்ணுளிப்பாம்பு, இருதலைமணியன் என்றும் அழைக்கப்படும் இருதலைப்பாம்பு, (Eryx johnii ) நச்சுத்தன்மை அற்றது. இந்தியத் துணைக்கண்டத்தின் வறண்ட பகுதிகள், வடமேற்குப் பகுதி, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும்பாலும் காணப்படுகிறது.


இருதலை ஏன்?


இதன் வால் மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; இதுவே இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற தவறான எண்ணத்திற்கு அடிகோலுகின்றது. மேலும், பாம்பாட்டிகள் இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவர் (கண் போலத் தெரிவதற்காக); பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை எளிதில் மயக்க முடியும்.


சிறைபிடிக்கப்படுவது ஏன்?


இவை சிறைப்படுத்தப்பட்டு, விரும்பத்தக்க செல்ல உயிர்களாக அதிகளவில் வளர்க்கப்படுவது அமெரிக்காவில் தான். இதற்கு இரு காரணங்கள்: அ] இவற்றின் குட்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. ஆ] வளர்ந்த பாம்புகளும் மிகவும் விரும்பத்தக்க வகையில் சாதுவானவை.


உடலளவு


 • பிறக்கும் போது – 22.0 செ.மீ

 • முழுவளர்ச்சி அடைந்த பின் – 75.0 செ.மீ

 • பெரும அளவு – 100 செ.மீ

 • உடல் தோற்றம்


  தடிமனான உடலுடன் மழுங்கிய முகடுடைய செதில்களும் உள்ளதால் தொடுவதற்கு வழுவழுப்பாக இருப்பவை; கழுத்தை விட தலை அகலம் குறைவாக இருக்கும். இதன் சிறிய கண்ணில் செங்குத்துக் கருவிழி காணப்படும். செம்பழுப்பு, கரும்பழுப்பு, செம்மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் காணப்படலாம். (ஒரே பாம்பு அல்ல)


  இயல்பு


  இரவில் வேட்டையாடும் இயல்புடைய இவை பெரும்பாலும் சாதுவான குணத்துடனே காணப்படுகின்றன. மணற்பாங்கான, வறண்ட பகுதிகளையே இவை விரும்பும். மண் மலைப்பாம்பைப் போன்ற இரையைக் கொல்லும் முறையை உடையது இப்பாம்பு; பிற பாம்புகளையும் இவை உண்ணக்கூடியவை.


  வேறுபாடான ஓர் இயல்பு


  இது தாக்கப்படும் போது, தன் தலையை மண்ணில் புதைத்து வாலை மேலெழுப்பி முன்னும் பின்னுமாக ஆட்டும்; எனவே, தாக்கவந்த எதிரி, இதன் வாலைத் தாக்கிவிட்டுச் சென்று விடும் – இதுவும் தலைதப்பும்.


  குட்டி இருதலைப்பாம்புகள்


  பெரும்பாலும் ஜூன் மாத தருணத்தில், நான்கிலிருந்து ஆறு வரை உயிருள்ள குட்டிகளாகவே பெண் பாம்புகள் ஈனும்; குட்டிகள் பட்டைகளையுடைய வால்களுடன் காணப்படும் (சில குட்டிகள் உடல்களிலும் பட்டையுடன் காணப்படும்).


  உருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்


 • டயர்டின் புழுப்பாம்பு (Diard’s Worm Snake)

 • வெளி இணைப்புகள்

  இருதலைப்பாம்பு – விக்கிப்பீடியா

  Boa genus – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.