காலியான்குட்டி அல்லது புல்லுருவி, நிகிதான் பாம்பு (Amphiesma stolatum) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இது ஆசியா கண்டத்தில் காணப்படுகிறது.. இது தவளை, தேரை . போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இது நீர் பாம்பு, புல் பாம்பு ஆகியவற்றை ஒத்திருக்கும்.
விளக்கம்
இது ஒரு சிறிய, மெல்லிய பாம்பு இதன் உடலில் இரண்டு மஞ்சள் கோடுகள் காணப்படும். இதன் உடல் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். தலைமுதல் வால்வரை மஞ்சள் பழுப்பு அல்லது பழுப்பு நிற இரண்டு நீளவரிகள் காணப்படும். இதன் உடலில் உள்ள செதில்கள் கரடுமுரடாக இருக்கும்.
இப்பாம்புகள் உடல் நீளம் வழக்கமாக 40 இல் இருந்து 50 செ.மீ (சுமார் 16 முதல் 20 அங்குளம்) ஆகும். அதிகபட்ச நீளம் 90 செ.மீ (35. 3/8). பெண் பாம்புகள் ஆண் பாம்பு களைவிட நீளமாக இருக்கும். அரிதாக 620 மிமீ (2.03 அடி) வரை இருக்கும்.
பரவல்
இப்பாம்புகள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாக்கித்தான், இலங்கை , பிலிப்பைன்ஸ் , இந்தியா ( அந்தமான் தீவுகள் உட்பட ), வங்கதேசம் , நேபாளம் , பர்மா , தாய்லாந்து , லாவோஸ் , கம்போடியா, வியட்னாம் , இந்தோனேசாயா, தைவான்,சீனா ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இப்பாம்பு மலைப்பகுதிகளில் 2,000 அடி (610 மீ) உயரம் வரை காணப்படுகிறது.
பாதுகாப்பு நிலை
இப்பாம்புகள் அதன் வாழிட எல்லை முழுவதும் பாதுகாப்பு கவலை இல்லை எனக் கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழல்
வாழ்விடம்
இந்து பாம்பு சமவெளி மற்றும் மலைகள் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கின்றது.
உணவுச் சூழலியல்
இதன் முதன்மை உணவில் சிறிய நீர்நில வாழ்வன வான தவளை, தேரை போன்றவை முதன்மை இடம்பெற்றவை. , மேலும் மீன் , மண்புழுக்கள் போன்றவையும் இதன் உணவுப்பட்டியலில் இடம்பெற்றவை ஆகும்.
இனப்பெருக்கம்
பெண் பாம்புகள் ஆகத்து ஏப்ரல் முதல் சூள் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முட்டைகள் மே முதல் செப்டம்பர் வரை நிலத்தடி துளைகளில் ஐந்து முதல் பத்துவரையான வெள்ளை நிற முட்டைகள் இடுகிறன்றன. அவவை குஞ்சு பொரிக்கின்ற வரை முட்டை அடைக்காக்கின்றன. குட்டிப் பாம்புகள் பிறந்த நேரத்தில் 13 முதல் 17 செமீ நீளம் இருக்கும். குட்டிகளின் உணவு சிறிய தவளைகள், தலைப்பிரட்டைகள், மீன்கள், மண்புழுக்கள், பூச்சிகள் ஆகியவைகள் ஆகும்.