சீனா தண்ணீர் பாம்பு

சீன தண்ணீர் பாம்பு (Chinese water snake), சீன மென்மையான தண்ணீர் பாம்பு, சீன சேற்று பாம்பு அல்லது சீன நெல் வயல் பாம்பு (என்கைடிரிசு சைனென்சிசு அல்லது மைரோபிசு சைனென்சிசு) மென்மையான நச்சுத் தன்மையுடைய பின்புற நச்சுப்பல்லுடைய ஆசியாவில் மட்டுமே காணப்படும் பாம்பு ஆகும்.


புவியியல் வரம்பு


சீனா, தைவான் மற்றும் வியட்நாமில் என்ஹைட்ரிசு சினென்சிசு காணப்படுகிறது.


வாழ்விடம்


பொதுவான பெயர் குறிப்பிடுவது போல, சீன தண்ணீர் பாம்பு நீர் வாழ் உயிரினமாகும். இது மீன் குளங்கள் மற்றும் நெல் வயல் போன்ற மனிதனால் மாற்றப்பட்ட நீர் சூழல்களில் காணப்படும்.


பாதுகாப்பு நிலை


என்கைடிரிசு சைனென்சிசு பொதுவானதாகக் கருதப்படுகிறது. இது தைவானில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.


விளக்கம்


என்கைடிரிசு சைனென்சிசு என்பது 80 cm (31 in) மொத்த நீளமுடைய (வால் உட்பட) ஒரு சிறிய பாம்பு ஆகும்.


உணவு


சீன நீர்ப் பாம்பு பொதுவாக மீன் மற்றும் நீல நீர் வாழ்வனவற்றை உண்ணுகிறது.


வணிக பயன்பாடு


என்கைடிரிசு சைனென்சிசு உணவு மற்றும் தோல்களுக்காக அதிக அளவி பிடிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களை அச்சுறுத்துவதாகக் கருதப்படவில்லை.


மருத்துவ பயன்பாடு


என்கைடிரிசு சைனென்சிசு நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாகச் சீன பாம்பு எண்ணெய் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி போன்ற வியாதிகளுக்கான சிகிச்சையில் இது பயன்படுகிறது.


வெளி இணைப்புகள்

சீனா தண்ணீர் பாம்பு – விக்கிப்பீடியா

Chinese water snake – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.