கிழக்கத்திய பச்சை மாம்பா என்பது தெற்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மட்டுமே காணப்படும் ஒரு நச்சுப் பாம்பு. இது மரத்திலேயே பெரும்பாலும் இருக்கும். இப்பாம்பு மாம்பா குடும்பத்திலேயே மிகவும் சிறியது. சராசரியாக 1.8 மீட்டர் நீளம் வரையும் வளரக்கூடியது. எனினும் 3.7 மீட்டர் நீளம் வரை அதிக பட்சம் இருந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி முதல் மொசாம்பிக், தான்சானியா, கென்யாவின் தென்கிழக்கப் பகுதி வரை இவை காணப்படுகின்றன. இப்பாம்புகள் பறவைகள், அவற்றின் முட்டைகள், சிறு பாலூட்டிகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். இதனுடைய நஞ்சு மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது.