ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று. இது வேட்டையாடவும், இரவில் வீட்டுக்குக் காவலாகவும் பயன்பட்டது. இதனைப் பற்றியும் இதன் பயன் பற்றியும் சங்கப்பாடல்கள் பல சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
ஞமலியை ஞாளி என்றும் வழங்குவர். இது புதியவர் வந்தால் குரைத்து வீட்டுக்காரர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.
தெருவில் உப்பு விற்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ஞமலி குரைத்தது. அதனைக் கண்டு அவள் வெருவினாள்.
முயல் வேட்டைக்கும் ஞமலி உதவும்.
ஞமலி மனவு என்னும் முள்ளம்பன்றியைக் கூட வேட்டையாடும்.
வேட்டைக்குச் செல்பவர் பல ஞமலிகளுடன் செல்வர். அவற்றைக் கண்டால் மகளிர் அஞ்சுவர்.
நான் எய்த அம்புக் காயத்துடன் ஆண்யானை ஒன்று இவ் வழியே வந்ததா என்று தலைவியை வினவிக்கொண்டே வந்த தலைவனோடு சினம் கொண்ட ஞமலி ஒன்றும் வந்தது.
வேட்டுவன் அம்பு எய்வதற்கு ஏதுவாக அமையும்படி ஞமலி ஆண்முள்ளம்பன்றியை வளைத்துத் துரத்தியது.
பொழுது போய் இருட்டும் வரையில் கடமானை வளைத்து வளைத்துத் துரத்திய ஞமலி கூட இளைப்பு வாங்குகின்றன.
கூத்தருடன் சேர்ந்து மலையேறும் விறலியரின் காலடிகள் மதம் பிடிக்காத ஞமலி நாக்கினைப் போலச் சிவந்து கசிவதை வெளிக்காட்டிக்கொண்டனர்.
ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைப்பர்.
காவிரிப்பூம்பட்டினத்தின் கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் நாய் இனம் தகர் ஆடுகளோடு சுழன்று இணக்கமாக விளையாடியது.
வெளி இணைப்புகள்
ஞமலி – விக்கிப்பீடியா