தோணியாமை (green sea turtle): கடலாமையின் ஒரு வகையான இதன் அறிவியல் பெயர் Chelonia mydas ஆகும். இவ்வகை ஆமைகள் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்டவை. 150 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருக்கும். இவற்றின் மேல் ஓடு அடர்ந்த பச்சை நிறம் கொண்டது. பாசிகளுக்கிடையே வளர்வதால்தான் இவை இந்த நிறத்தில் இருக்கின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், அந்தமான் கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன.எப்போதாவது முட்டையிடுவதற்காக குஜராத் கடற்கரைப் பகுதிகளுக்கு வரும். இவை ஒரு தடவையில் 104 முட்டைகள்வரை இடும். இவை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுவதால் சில பகுதி மக்கள் இவற்றை வழிபடுகிறார்கள். இவற்றின் எலும்புகளால் சமைக்கப்பட்ட சூப் மிகவும் புகழ் பெற்றது. இவை, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. பெரிய துடுப்புபோன்ற இவற்றின் கால்கள் மூடுகாலணிகள் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன.
About the author
Related Posts
October 4, 2021
பசையெடுப்பான் குருவி
September 20, 2021
வேட்டை நாய்
October 4, 2021