இந்திய நட்சத்திர ஆமை

இந்திய நட்சத்திர ஆமை (Indian star tortoise)(ஜியோசெலோன் எலிகன்சு) என்பது வறண்ட பகுதிகளில் காணப்படும் நில ஆமை ஆகும். இது இந்தியா, பாக்கித்தான் மற்றும் இலங்கையில் புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த இனம் கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானது. இதன் காரணமாக இந்த ஆமை ஆபத்தில் உள்ளது. இந்திய நட்சத்திர ஆமை 2019ஆம் ஆண்டில் CITES பின் இணைப்பு Iல் சேர்க்கப்பட்டது (அழிந்துபோகும் அச்சுறுத்தல்). இதனால் அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் (183 நாடுகளுடன் கூடிய CoP18 இன்) முழு ஒருமித்த கருத்தினால், சர்வதேச வர்த்தகத்திலிருந்து மிக உயர்ந்த பாதுகாப்பை அளிக்கிறது. இருப்பினும் செல்லப்பிராணி வர்த்தகத்தில் விற்கப்படவிருந்த 6,040 இந்திய நட்சத்திர ஆமைகள் உலகளவில் கைப்பற்றப்பட்டதாக டிராஃபிக் என்ற பாதுகாப்புக் குழு கண்டறிந்தது.


உடற்கூறியல் மற்றும் உருவவியல்


ஜி. எலிகன்ஸிசு மேலோடு மிகவும் குவிந்திருக்கிறது. முதுகுபுற கவசங்கள் பெரும்பாலும் திமிலை உருவாக்குகின்றன. பக்கவாட்டு விளிம்புகள் செங்குத்தாகவும், பின்புற விளிம்பு ஓரளவு விரிவடைந்து வலுவாகக் காணப்படும். இதற்கு பிடறி செதில்கள் இல்லை. வால் மேல் செதில் பிரிக்கப்படாமல் உள்ளது. ஆண் ஆமையில் உள்நோக்கி வளைந்திருக்கும். செதில்கள் வலுவாகச் செறிவூட்டப்பட்டுள்ளன. முதல் முதுகெலும்பு செதிலின் அகலத்தை விட நீளமானது. மற்றவை நீளத்தை விட அகலமானவை. மூன்றாவது குறைந்தபட்சம் அதனுடன் தொடர்புடைய அடுத்ததை விட அகலமானது. மார்புப்பரிசம் பெரியது, பிளவுபட்டது, முன்பக்கம் வெட்டுவாய்(காடி)யுடன் கூடியது. தலை மிதமான அளவுடையது. வீங்கிய முன் நெற்றி, குவிந்து, சிறிய மற்றும் ஒழுங்கற்ற கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அலகு மெலிதாக இணைக்கப்பட்டுள்ளது. இரு- அல்லது மூன்று கதுப்புடைய பல்வரிசை தாடையின் விளிம்பில் காணப்படுகிறது. மேல் தாடை நுண் குழியுடைய முகடு வலுவானது. முன் மூட்டுகளின் வெளிப்புற-முன்புறம் ஏராளமான சமமற்ற அளவிலான, பெரிய, செதில் கட்டமைப்புடன், எலும்பிலான, கூர்மையான குழல்நீட்டிகளைக் கொண்டுள்ளது. மேலோடு கருப்பு நிறமானது. மஞ்சள் நிற கோடுகள் குறுக்கு நெடுக்காக அதிக அளவில் காணப்படுகிறது. வயிற்றுக்கவசம் கருப்பு மற்றும் மஞ்சள், கதிர் கோடுகளைக் கொண்டுள்ளது. இந்திய நட்சத்திர ஆமை 10 அங்குலம் வரை வளரலாம்.


வடிவமைத்தல் மிகவும் மாறுபட்டதாக இருப்பதால், அதன் நிறம், ஆமை புல் அல்லது தாவரங்களின் நிழலில் அமர்ந்திருப்பதால் அதன் வெளிப்புறத்தை மறைக்கிறது. இவை பெரும்பாலும் தாவர உண்ணி வகையாகும். புல், மரங்களிலிருந்து கீழே விழுந்து கிடக்கும் பழம், பூக்கள் மற்றும் சதைப்பற்றுள்ள தாவரங்களின் இலைகளை உண்ணும். அவ்வப்போது அழுகுடல்களைச் சாப்பிடும். ஆனால் செய்கையாக வளர்க்கும்போது உணவாக இறைச்சியினை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.


முதிர்ச்சியடைந்த இந்திய நட்சத்திர ஆமைகளின் பாலியல் ஈருருமைத் தன்மை வெளிப்படையானது. பெண் ஆமை ஆண் ஆமையினை விட அளவில் பெரியவை. கூடுதலாக, பெண்களின் மார்புக்கவசம் ஆண்களை விட மிகவும் தட்டையானவை. இவை குழிவான வடிவத்தைக் கொண்டுள்ளன.


இந்த உயிரினத்தின் வடிவம் இயல்பாகவே திருப்பி போட்ட பின்னர் ஒரு நிலையான நிலைப்பாட்டிற்குத் திரும்புவதற்கு ஏற்றவாறு சிறப்பாகத் தழுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. புடாபெசுட்டு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் கணிதவியலாளர்கள் கோபர் டொமோகோஸ் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பீட்டர் வர்கோனாய் ஆகியோர் காம்பாக் எனப்படும் ஒரே மாதிரியான பொருளை வடிவமைத்தனர். இது ஒரு நிலையற்ற இருப்பு புள்ளியையும் சரியாக ஒரு நிலையான இருப்பு புள்ளியையும் கொண்டுள்ளது. கீழ்-எடை கொண்ட (ஒத்திசைவற்ற எடை விநியோகம்) கோளம் எப்போதும் அதே நேர்மையான நிலைக்குத் திரும்புவதைப் போலவே, அதே வழியில் செயல்படும் ஒரு வடிவத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கண்டறிந்தனர். இதன் பிறகு, இவர்கள் இந்திய நட்சத்திர ஆமைக்கு ஒற்றுமையைக் கண்டறிந்து, 30 இந்திய நட்சத்திர ஆமைகளை தலைகீழாக இட்டு சோதனை செய்தனர். இவற்றில் பலர் சுயமாகச் சரிசெய்யும் தன்மையுடையன எனக் கண்டார்கள்.


வரம்பு மற்றும் பரவல்


இவை இந்தியா (கீழ் வங்காளத்தைத் தவிர), சிந்து மாகாணம் (பாக்கித்தான்) மற்றும் இலங்கையில் காணப்படுகிறது. இந்தியாவில் இவை சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் காணப்படுகின்றன. ஒரு சில ஆய்வுகள் இந்த வர்த்தகத்தின் விளைவாக இயற்வாழிட ஆமையின் எண்ணிக்கை இழப்பு குறித்து எச்சரிக்கின்றன.


வெளி இணைப்புகள்

இந்திய நட்சத்திர ஆமை – விக்கிப்பீடியா

Indian star tortoise – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *