இந்திய முட்டைதின்னிப் பாம்பு என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் அரிய பாம்பு ஆகும்.
புவியியல் வரம்பு
இந்திய முட்டைதின்னிப் பாம்பு வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் அண்மையில் இந்த இனப்பாம்பு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இனப்பாம்புகள் 1969 இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டுவந்த நிலையில் செம்பட்டியலில் இடம்பெற்றது. இருப்பினும், 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வார்தா என்னுமிடத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
விளக்கம்
இந்த வகை பாம்புகள் நிறம் பொதுவாக கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.மஞ்சள் கோடுகள் தலையின் மேற்பகுதியில் இருந்து கழுத்துவரையிலும், கண்களின் மேற்பகுதிவரையிலும் நீண்டிருக்கும். வளர்ந்த பா்ம்புகளின் வால்11 செமீ (4¼ அங்குளம்) நீளமும் மொத்த நீளம் 78 செமீ (31 அங்குளம்) கொண்டவை
உணவு
இந்த பாம்புகளின் முதன்மை உணவு பறவைகளின் முட்டைகளும், ஊர்வனவுமே ஆகும். இதன் வாயமைப்பு முட்டைகளை உண்பதற்கேற்றவாறு அமைந்துள்ளது. இதன் தொண்டை விரிவடையக்கூடிய வகையில் இருப்பதால் தனது உடல் அளவைவிட மூன்று நான்கு அளவு பெரியதான முட்டைகளை விழுங்கிவிடும். கழுத்துப் பகுதில் உள்ள எலும்புகள் சற்றே நீளமாகி உணவுக்குழாய்க்குள் சென்றுவிடுகின்றன, இதனால் விழுங்கப்பட்ட முட்டைகள் உணவுக் குழாய்க்குள் உள்ள முள்போன்ற எலும்புகளால் உடைக்கப் படுகிறது.