லாப்ரடர் ரெட்ரீவர் (Labrador Retriever) என்பது ஒருவகை நாய் ஆகும். இது இளம் சிறார்களுக்கும் முதியவர்களுக்கும் ஏற்ற நாய். இது விளையாடும் குணமுடையது. பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த நாய் பயன்படுகிறது.
உடலமைப்பு
இவை பெரிய உடலமைப்பை உடையவை. ஆண் நாயானது 29 முதல் 41 கிலோகிராம் எடை வரை இருக்கும். பெண் நாயானது 25 முதல் 32 கிலோகிராம் எடை இருக்கும்.இவை பொதுவாக மூன்று நிறங்களில் காணப்படும் . கறுப்பு , மஞ்சள் மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை 10 முதல் 12 வருடங்கள் உயிர் வாழும்.
வெளி இணைப்புகள்
லாப்ரடர் ரெட்ரீவர் நாய் – விக்கிப்பீடியா