பேராமை அல்லது ஏழுவரி ஆமை, ஓங்கல் ஆமை, தோல்முதுகு ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும் இந்த ஆமையின் அறிவியல் பெயர் “Dermochelys Coriacea” ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான். ஏறத்தாழ 1–1.75 மீ (3.3–5.7 அடி) நீளமும் 250 – 700 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும். மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 100 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.
வெளி இணைப்புகள்
Leatherback sea turtle – Wikipedia