மாலி நாகம் (Mali cobra)(நாஜா கடியென்சிசு), கட்டியன் துப்புதல் நாகம் அல்லது மேற்கு ஆப்பிரிக்க பழுப்பு துப்புதல் நாகம் எனப்படுவது துப்புதல் நாகம் வகையாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
புவியியல் பரவல்
இந்த இனம் செனகல் முதல் கேமரூன் வரை , காம்பியா, கினி-பிசாவு, தூர வடக்கு கினி, தெற்கு மாலி, கோட்டிவார், புர்க்கினா பாசோ, வடக்கு கானா, டோகோ, தென்மேற்கு நைஜர் மற்றும் நைஜீரியாவில் காணப்படுகின்றது.
வாழ்விடம்
இந்த இனம் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல புல்வெளிகள், புன்னிலங்கள் மற்றும் புதர் காடுகளில் காணப்படும்.