மம்பாம்பு, மம்பா அல்லது “மாம்பா” (Mamba) என்பது விரைந்து ஊரும் தரையில் வாழும் ஒரு நச்சுப் பாம்புப் பேரினம் (dendroaspis) ஆகும். இது எலாப்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகையைச் சேர்ந்த கருப்பு மாம்பா தான் ஆப்பிரிக்காவிலேயே நீளமான நச்சுப்பாம்பு. மேற்கத்திய பச்சை மாம்பாவும் கிழக்கத்திய பச்சை மாம்பாவும் கிட்டத்தட்ட கருப்பு மாம்பாவிற்கு இணையான நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் கருப்பு மாம்பாவை விட சற்றுச் சிறியவை. பெரும்பாலும் மரத்தில் வாழ்பவை. இப்பாம்புகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் ஓய்வெடுக்கும்.
தமிழ் சொல்லான ”மம்பா”வில் “ம” என்கிற சொல் விடத்தன்மையை குறிக்கும், ”பா” என்பது பாம்பை குறிக்கும், இப்பெயர்க்காரணம் அனைத்து மம்பா(ம்பு)க்களும் கொடிய விடத்தன்மையுடையவை. எதிர்நஞ்சு செலுத்துவதற்கு முன் ஏற்படும் மரண விகிதம் மிக அதிகம. எதிர்நஞ்சு அளிக்காவிடில், மரணம் ஒரு சில நிமிடங்களிலேயே ஏற்படும்.