நீலகிரி பொந்து பாம்பு

நீலகிரி பொந்து பாம்பு (Plectrurus perrotetii-பெலிக்டுரரசு பெரோடெட்டி) என்பது பெரோடெட்சு கேடயவள் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஓர் விசமற்ற மிகச்சிறிய பாம்பு சிற்றினமாகும். இந்த பாம்பு இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய ஓர் அகணிய உயிரியாகும்.


பெயரிடல்


பிரெஞ்சு இயற்கையியலாளர் ஜார்ஜ் சாமுவேல் பெரோட்டெட்டின் (1793-1867) நினைவாக இந்த பாம்பின் சிற்றினப் பெயரான பெரோடெட்டி இடப்பட்டது.


பரவல்


இது இந்தியாவின் தெற்கு பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.


விளக்கம்


இப்பாம்புகள் அளவில் சிறியதாக இருக்கும். இதன் நீளம் அதிகபச்சமாக 44 செமீ வரை (17.5 அங்குலம்) வளரக்கூடியது. பழுப்பு நிறத்தில் இருக்கும், கூரான தலை மற்றும் மழுங்கிய வால்கொண்டிருக்கும். இதன் உடலிலில் பளபளப்பான செதில்கள் இருக்கும்.


உயிரியல்


இப்பாம்புகள் பொதுவான புழுப்பாம்பு போல இருக்கும். சிலர் இதை மண்புழு என தவறாக கருதவும் இடம் உள்ளது. மலைக்காடுகளில் இதன் வாழிடம் அழிக்கப்படுவதால் இது அருகிவரும் இனமாகிவிட்டது.


வெளி இணைப்புகள்

நீலகிரி பொந்து பாம்பு – விக்கிப்பீடியா

Plectrurus perrotetii – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.