நீர்க்காத்தான் குட்டி பாம்பு

நீர்க்காத்தான் குட்டி (அ) நீர்க்காத்தான் பாம்பு ( Striped Keelback – Amphiesma stolatum ), ஆசியா முழுவதிலும் பொதுவாகக் காணப்படும் விடமற்ற பாம்பு.


உடல் குறிப்பு


ஏரா போன்ற செதில்களும் மெலிந்த உடலும் கொண்ட சிறு பாம்பு இது; ஒலிவுப்பழுப்பிலிருந்து சாம்பல் வரை சில நிறங்களில் இருக்கும். மொத்த நீளத்தில் கால்பகுதி இதன் மெல்லிய வாலே. முதுகின் இருபக்கத்திலும் தலையிலிருந்து வால் வரை பட்டைக்கோடுகள் நீர்க்காத்தான் பாம்பின் தெளிவான அடையாளம்.


வாழிடங்கள்


நீர்க்காத்தான் ஆற்றங்கரை, சதுப்புநிலம், ஈரநிலங்களில் பொதுவாகத் தென்பட்டாலும் நெல்வயல், புல்வெளி, புதர், தோட்டங்களிலும் பருவமழைக் காலங்களில் காணப்படும் இப்பாம்பு பகல், இரவு இரு நேரங்களிலும் இயங்கும்.


முக்கியச் சிறப்பியல்புகள்


 • இச்சிறு பாம்பு நச்சுத்தன்மை அற்றது.

 • மிகவும் சாதுவானது.

 • வெளி இணைப்புகள்

  நீர்க்காத்தான் குட்டி – விக்கிப்பீடியா

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.