இந்திய மலைப் பாம்பு

இந்திய மலைப் பாம்பு (Python molurus) அல்லது கருப்பு வால் மலைப் பாம்பு, இந்தியப் பாறை மலைப்பாம்பு. என்பது ஒரு மலைப்பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.


விளக்கம்


இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது வழவழப்பான செதிள்கள், பிரகாசமான தழும்புகளைக் கொண்டிருக்கும்.. இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும். மலை காடுகளில் காட்டாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும்.


பாக்கித்தானில் உள்ள இந்திய மலைப்பாம்புகள் பொதுவாக 2.4-3 மீட்டர் (7.9-9.8 அடி) வரை நீளம் உடையவை. இந்தியாவில் உள்ள கிளையினங்கள் சராசரியாக 3 மீட்டர் (9.8 அடி) நீளம் வரை வளரும்


புவியியல் எல்லை


இப்பாம்பின் கிளையினங்கள் இந்தியா , தெற்கு நேபாளம், பாக்கித்தான் , இலங்கை , பூட்டான் , வங்கதேசம், வடக்கு மியான்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.


வாழ்விடம்


இவை புல்வெளிகள், சதுப்பு நிலம், கழிமுகம் பேன்ற இடங்களில் உள்ள பாறை அடிவாரத்தில், மரக்காடுகள், குறிப்பாக தண்ணீர் ஊற்றுகள் சார்ந்த வாழ்விடங்களில் பரவலான காணப்படுகிறது. சில நேரங்களில் இவை பாலூட்டிகளால் கைவிடப்பட்ட வளைகள், மரங்கள் பொந்துகள், தண்ணீர் நிறைந்த நாணல் மற்றும் சதுப்புநிலக் காடுகளில் காணப்படுகின்றன.


நடத்தை


இவை மந்தமாக, மெதுவாக நகர்வது வழக்கம் கொண்டவை. மறைந்திருந்து அதிரடியாக தன் உணவை வேட்டையாடக்கூடியது. பிற பாம்புகள் போல வளைந்து வளைந்து நகராமல் நேராக நகரக்கூடியவை. இவை மிகச்சிறப்பாக நீருக்கடியில் நீந்தக்கூடியவை. தேவைப்பட்டால் பல நிமிடங்கள் நீரில் மூழ்கி இருக்கும். இப்பாம்புகள் பொதுவாக நீர்நிலை அருகில் இருக்கவே விரும்புகின்றன.


உணவு


அனைத்து பாம்புகள் போலவே, இந்திய மலைப்பாம்புகள் ஊணுண்ணிகள் ஆகும். இவைற்றின் உணவு பாலூட்டிகள், பறவைகள் போன்றவை முதன்மையானவையாகும். இரையை திடீர் என தாக்கிப் பிடித்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுசுற்றிவளைத்து இரையை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கிறது. பின்னர் முதலில் தலையில் இருந்து விழுங்குகிறது. பெரிய உணவை சாப்பிட்ட பிறகு மந்தமாக பல நாட்கள் அல்லது பல வாரங்கள் செரிமானத்துக்கு ஓய்வெடுத்துக்கொள்ளும். நன்கு சாப்பிட்டு பிடிபட்ட மலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆண்டுகள்வரை பட்டினி இருந்துள்ளதாக பதிவு உள்ளது. இதன் தாடை எலும்புகள் இணைக்கப்படாததால் மலைப்பாம்பு அதன் உடல் விட்டத்தை விட பெரிய இரையை விழுங்க முடியும். மேலும், இரை அதன் வாயிலிருந்து தப்பிக்க இயலாதவாறு அதன் வாயினுள் பிடிமானள்ளது.


இனப்பெருக்கம்


பெண் பாம்புகள் ஒரு முறை 100 முட்டைகள் வரை இடும். பெண் பாம்புகளே முட்டைகள் பாதுகாக்காத்து அடைகாக்கும். தன் உடல் தசைகளை சுருக்கி அதன் மூலம் சுற்றுப்புறத்தைவிட தங்கள் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறத்து அடைகாக்கும் திறன் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குட்டியின் நீளம் 45-60 செமீ (18-24) இருக்கும். இவை மிக விரைவில் வளரும்.. வெப்பமூட்டி அறைகளை பயன்படுத்தி ஒரு செயற்கை அடைகாக்கும் முறையில் கைவிடப்பட்ட பாம்பு முட்டைகளில் இருந்து குஞ்சுகளை பொரிக்க முறை இந்தியாவில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு நிலை


இந்திய மலைப்பாம்புகள் அழியவாய்ப்பில் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தனது செம்பட்டியல் வழியாக அறிவித்துள்ளது. (v2.3, 1996).


வெளி இணைப்புகள்

இந்திய மலைப் பாம்பு – விக்கிப்பீடியா

Python molurus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.