கண்ணாடி விரியன் பாம்பு

கண்ணாடி விரியன் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Russel’s Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.


உடல் தோற்றம்


 • தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.

 • தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.

 • பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

 • நிறம் மற்றும் குறிகள்


 • பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.

 • உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.

 • உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.

 • உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

 • நச்சு


  விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய விஷம் ஆகும். ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும்.


  வெளி இணைப்புகள்

  கண்ணாடி விரியன் – விக்கிப்பீடியா

  Russell’s viper – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *