இராசகிரீடப்பாம்பு

இராசகிரீடப்பாம்பு அல்லது பரிவட்டம் பாம்பு (Spalerosophis Diadema ) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும்.


புவியியல் வரம்பு


ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான், வட இந்தியா, சோவியத் ஒன்றியம், தென் துர்க்மெனிஸ்தான், தென் கசகஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிசுத்தான், மொராக்கோ, அல்ஜீரியா, துனீசியா, லிபியா, எகிப்து, சினாய் தீபகற்பம், இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, மேற்கு சகாரா, மூரித்தானியா, மாலி, நைஜர், வடக்கு சூடான், துருக்கி, அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் இப்பாம்புகளும் அதன் கிளை இனங்களுடன் காணப்படுகிறன.


விளக்கம்


வளர்ந்த பாம்புகள் சுமார் 1.8 மீட்டர் (சுமார் 6 அடி) நீளம் இருக்கும். இதில் 34 செமீ (13½ அங்குலம்) இதன் வால் ஆகும். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். பெரிய பாம்புக்கு கருந்தலையும், உடல் முழுக்க ஒழுங்கற்ற கருப்பு குறிகள் உண்டு. வயிற்றுப்புறமாக இளம் மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.


வெளி இணைப்புகள்

இராசகிரீடப்பாம்பு – விக்கிப்பீடியா

Spalerosophis diadema – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.