பர்சிபர் பால்டேட்டசு (Furcifer balteatus) என்றழைக்கப்படும் இரு பட்டை பச்சோந்தி அல்லது மழைக்காட்டு பச்சோந்தி இனம் மடகாசுகர் பகுதியில் மட்டுமே வசிக்கக்கூடியதாகும். இதனை 1851ஆம் ஆண்டு ஆண்ட்ரே மேரி கான்சுடன்ட் டுமரில் மற்றும் கேப்ரியல் பிப்ரான் போன்றவர்கள் விவரித்தனர்.
பரவல் மற்றும் வாழ்விடம்
பர்சிபெர் பால்டெட்டாசு மடகாஸ்கரின் தென்கிழக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. சூழல் வெப்பநிலை 14 மற்றும் 20 செல்சியசு (57 மற்றும் 68 பாரன்ஃகைட்) வரையும், ஆண்டு மழையளவு 4000 மில்லி மீட்டராக உள்ள ரனோமபானாவில் இந்த பச்சோந்தியினைக் காணலாம். இந்த பச்சோந்திகள் 1,971 சதுர கிலோமீட்டர்கள் (761 சதுர மைல்கள்) பரப்பில் தொடர்ச்சியற்ற பரவலைக்கொண்டது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றிய தகவலின்படி இதன் எண்ணிக்கை குறைந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த பச்சோந்திகள் பெரும்பாலும் கடல்மட்டத்திலிருந்து சுமார் 800 முதல் 1,050 மீட்டர்கள் (2,620 முதல் 3,440 ft) உயரத்தில் வாழ்கின்றன. இது ஓர் அரிய இனம், பெரும்பாலான நேரங்களில் தனித்த நிலையிலே காணப்பட்டுள்ளன. ஐ.யூ.சி.என் ஆபத்தான உயிரினமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருசில கணக்கெடுப்புகள் இதனை நிரூபிக்கத் தவறிவிட்டன. இந்த பச்சோந்திகளின் அழிவிற்கு அதன் வன வாழ்விட சீரழிவு காரணமாக உள்ளது. இது CITES பட்டியலில் இடம்பெற்ற இனமாகவும், மடகாஸ்கரிலிருந்து பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்வது 1994 முதல் தடைசெய்யப்பட்ட இனமாகவும் உள்ளது. இருந்தபோதிலும், இது செல்லப்பிராணி வர்த்தகத்திற்கு மிகவும் விரும்பத்தகுந்ததாக உள்ளது. இதனால் நிலவும் சட்டவிரோத ஏற்றுமதிகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
விளக்கம்
அடிப்படையில் பச்சை நிறமாக இருந்தாலும், ஃபுர்சிஃபர் பால்டீட்டஸ் தன்னுடைய மர வாழிடச்சூழலுக்கு மாறுபட்டு மறைந்து வாழக்கூடியது. இது பெரும்பாலும் இருண்ட பச்சை மூலைவிட்ட கோடுகளைக் கொண்டிருக்கிறது. இதன் உடல் நீளம் 24 cm (9 in). ஆண்களின் தலையில் சுமார் 1.5 cm (0.6 in) ஓர் இணை கொம்புபோன்று துருத்திக்கொண்டிருக்கும். வேண்டும் அவர்களின் தலையில் நீண்டது. இந்த பச்சோந்தி பொதுவாக இரண்டு-பட்டைகள் கொண்ட பச்சோந்தி அல்லது மழைக்காட்டு பச்சோந்தி என்று அழைக்கப்படுகிறது.
வகைப்பாடு
இந்த இனத்தினை ஆரம்பத்தில் டுமரில் & டுமரில் 1851: 32 இல் டுமரில் மற்றும் பிப்ரான் ஆகியோரால் விவரிக்கப்பட்டது. 1865இல் கிரேயால் இது டிக்ரானோசரா பைபர்கா வர் கிராசிகார்னிசு என விவரிக்கப்பட்டது . மீண்டும் 1865 இல் கிரே கெமிலியான் பேல்டெட்டசு என விவரித்தார். பின்னர் ஏஞ்சல் 1942 இல் சாமலியோ பால்டியஸ் என்று விவரித்தார். 1911: 27 இல் வெர்னர் இதை சாமலியன் பிஃபிடஸின் கீழ் விவரித்தார். பின்னர் இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மெர்டென்ஸ் 1966 இல் சாமலியோ பிஃபிடஸ் என்று விவரிக்கப்பட்டது. பிரைகோ மற்றும் டொமெர்க்யூ 1969 ல் கெமிலியோ பால்டேட்டசு என்று வர்ணித்தார். பின்னர் பிரைகோ 1971, 1978 ல் இதே பெயரில் விவரித்தார். 1986 ஆம் ஆண்டில், இது பர்சிபர் பால்டேட்டசு என்று அறியப்பட்டது. கிளாவர் மற்றும் பாஹ்ம் இதை 1986 இல் விவரித்தனர். பின்னர் இது 1994 ஆம் ஆண்டில் கிளா மற்றும் வென்சஸ் ஆகியோரால் அதே பெயரில் விவரிக்கப்பட்டது.பர்சிபர் பால்டேட்டசு 1999இல் நிகாசு என்பவரால் விவரிக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
இரு பட்டை பச்சோந்தி – விக்கிப்பீடியா