காமன் பிரைடல் பாம்பு

அலங்கார பாம்பு அல்லது காமன் பிரைடல் பாம்பு(Common Bridal Snake) (Dryocalamus nympha) (Blanford’s Bridal Snake) இவ்வகை பாம்பு இனங்கள் இந்தியாவின் தென்பகுதியிலும், இலங்கையிலும் காணப்படும் அரியவகையான அலங்கார பாம்பாகும். இதன் தலைக்கு பின்புறன் மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும். இது பளபளப்பான கருப்பு நிறத்தில், வெள்ளைக்கோடுகள் உடம்பில் கொண்டுள்ளது. இதன் முதுகில் சாம்பல் வண்ணத்தில் சரியானமுறையில் அமையப்பெறாத கோடுகள் காணப்படுகிறது. இப்பாம்பு வகையானது 1 அடி நீளம் வளரும். இது விசத்தன்மை இல்லாதது. மிகவும் குளிர் நிறைந்த மலைகளில் உயரமான பகுதியில் வாழும் உயிரினம் ஆகும். 1,500 அடிகள் உயரம் கொண்ட மலைபிரதேசங்களில் வாழும் தன்மைகொண்டது. இந்த பாம்பின் தலை முட்டை வடிவத்தில் அமைந்திருக்கும்.


குணம்


இயற்கையாகவே ஒரு பயந்த சுபாவம் கொண்ட, மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் இந்த வகையான பாம்புகள் இரவில் மட்டுமே வெளியில் வரும். அதன் எதிரிகளை மிகவும் ஆக்ரோசமாக தாக்கும் குணம் கொண்டது. தனது இரையைத்தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்குள் கூட வரும் இயல்புடையது. மனிதர்கள் வாழும் வீடுகளில் உள்ள சுவர் இடுக்குகளில் தங்குவதால் அதன் முடிவை அதே தேடிக்கொள்கிறது.


உணவு பழக்கம்


இவை சிறிய வகை பல்லிகள், பூச்சிகள், தவளைகளையும் உட்கொள்ளும் தன்மை கொண்டதாக உள்ளது. இவ்வகை பாம்புகள் முட்டை இடுவதாக கருதப்படிகிறது. இவ்வகைப்பாம்புகள் தனது வயிற்றுப்பகுதியை சாய்வாகச் கொண்டு ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது.


வெளி இணைப்புகள்

காமன் பிரைடல் பாம்பு – விக்கிப்பீடியா

Vellore bridle snake – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *