நச்சுப் பாம்பு

நச்சுப் பாம்புகள் பாம்பின் ஒரு வகையாகும், இவை நச்சினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை, இது தனது நச்சுப்பற்களால் இரைவிலங்கினுள் நச்சினை செலுத்தி அதன் நகர்வை தடைசெய்து கொன்று இரையாக்கிக்கொள்கிறது . மேலும் எதிரிவிலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் நச்சுப்பல்லினை பயன்படுத்துகிறது. பெரும்பாலான நச்சுப் பாம்புகள் எலப்பிடெ, வைபிரிடெ, அட்ராக்டாசுப்பிடெ குடும்ப வகையினதாகவும் சில நச்சுப்பாம்புகள் மட்டும் கொலுபிரிடெ குடும்பத்தைச் சார்ந்ததாகவும் உள்ளன.மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வகைப் பாம்புகளின் நச்சின் மரண வீரியக் குறியீடு எல்டி50.


பரிணாம வளர்ச்சி


நச்சுப் பாம்புகளின் பரிணாம வரலாறு இரண்டரை கோடி (25 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. உண்மையில் பாம்பு நச்சு என்பது மாற்றமடைந்த உமிழ்நீராகும். இந்த நச்சு இரையைக் கொன்று அதன் இயக்கத்தை தடை செய்யவும் எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் உயர் சிறப்படைந்த உள்ளீடற்ற பல்லின் வழியே இலக்கு விலங்கின் தோல், தசைகளை துளைத்துக்கொண்டு இரத்த நாளத்திற்குள் பீச்சுகிறது.


வகைப்பாடு


நச்சுப் பாம்புகளுக்கென தனித்த அல்லது சிறப்பு வகைப்பாடு இல்லை. இவ்வினங்கள் பல குடும்பங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இது பரிணாம வளர்ச்சியின் விளைவாக,

குடும்பம் விவரம்
அட்ராக்டாசுப்பிடெ (atractaspidids) பொந்துக் கட்டுவிரியன், மச்ச விரியன்,குத்துவாள் தலைப்பாம்பு
கொலுபிரிடெ (colubrids) பெரும்பாலும் ஆபத்தில்லாதவை,ஆனால் இதில் ஐந்து இனங்கள் மனித இறப்பை ஏற்படுத்துகின்றன (Dispholidus typus)
எலப்பிடெ (elapids) கடல்பாம்புகள், நாக பாம்பு வகைகளான ராஜநாகம் நல்ல பாம்பு மாம்பா எனப்படும் ஆப்பிரிக்க பாம்பு, பவளப்பாறை பாம்புகள்
வைப்பிரிடெ (viperids) பெரும்பாலான கட்டுவிரியன் வகைகள், சங்கிலிக்கருப்பன் அல்லது கிலுகிலுப்பை பாம்பு (rattlesnake)

உலகின் மிகவும் விஷ பாம்புகள்

பாம்பு காணும் பகுதி தோல்கீழ் செலுத்துதல் கொல்லும் அளவு 50 இரத்தநாளம் வழியாக கொல்லும் அளவு 50
உள்நாட்டு தைபன் ஆத்திரேலியா 0.01 mg/kg 0.025 mg/kg
டுபோயிஸின் கடல் பாம்பு பவளக் கடல், அராபுரா கடல், திமோர் கடல், தார் நதி மற்றும் இந்தியப் பெருங்கடல் N/A 0.044 mg/kg
கிழக்கு பழுப்பு பாம்பு ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, இந்தோனேசியா 0.041 mg/kg 0.053 mg/kg
மஞ்சள் வயிற்று கடல் பாம்பு வெப்பமண்டல கடல் நீர் N/A 0.067 mg/kg
பெரோனின் கடல் பாம்பு சியாம் வளைகுடா, தைவான் ஜலசந்தி, பவள கடல் தீவுகள் மற்றும் பிற இடங்கள் N/A 0.079 mg/kg
கரையோர தைபன் ஆத்திரேலியா 0.064 mg/kg 0.105 mg/kg
பல-கட்டுப்பட்ட கிரெய்ட் மெயின்லேண்ட் சீனா, தைவான், வியட்நாம், லாவோஸ், பர்மா N/A 0.108 mg/kg
கருப்பு-கட்டுப்பட்ட கடல் கிரெய்ட் மலாய் தீபகற்பம் மற்றும் புருனேயின் கிழக்கு கடற்கரை மற்றும் இந்தோனேசியாவின் ஹல்மஹெராவில் N/A 0.111 mg/kg
கருப்பு புலி பாம்பு ஆத்திரேலியா 0.099 mg/kg 0.131 mg/kg
மெயின்லேண்ட் டைகர் பாம்பு ஆத்திரேலியா 0.118 mg/kg 0.118 mg/kg
மேற்கு ஆஸ்திரேலிய புலி பாம்பு ஆத்திரேலியா 0.124 mg/kg 0.194 mg/kg
கடல் பாம்பு வெப்பமண்டல இந்தோ-பசிபிக் 0.164 mg/kg 0.1125 mg/kg

வெளி இணைப்புகள்

நச்சுப் பாம்பு – விக்கிப்பீடியா

Venomous snake – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *