மஞ்சள் வாய் கடல் விரியன் பாம்பு

மஞ்சள் வாய் கடல் விரியன் (Laticauda colubrina), அல்லது வரிகொண்ட கடல் விரியன் என அழைக்கப்படுவது கடல்வாழ் பாம்பினத்தை சேர்ந்த வெப்பவலயத்துக்குரிய இந்திய பசிபிக் கடல் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு நச்சுப் பாம்பினமாகும். இப்பாப்பு தனித்துவமான கறுப்புக் கோடுகளையும் மஞ்சள் நிற வாயையும் நீந்துவதற்கு உரிய துடுப்புப் போன்ற வாலையும் கொண்டது. இது அதன் அதிகமான நேரத்தை வேட்டையாடுவதற்காக நீருக்கு அடியில் கழிப்பதுடன் சமிபாடு, ஒய்வு, இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு தரைக்குத் திரும்பும். நரம்புத்தொகுதியைத் தாக்கவல்ல இதனது வீரியமான நஞ்சு, கடல் விலாங்கு மற்றும் சிறிய மீன்களைப் பிடிக்க உதவும். தரைக்கு வரும்போது இவை மனிதரையும் தாக்குகின்றது. இது தற்காப்புக்காகவே மனிதரைத் தாக்குகின்றது.


விபரிப்பு


மஞ்சள் வாய் கடல் விரியனின் தலைப்பகுதி கருமை நிறமுடையது. மூக்கு நீண்டதாகவும் பிரிபடாத வளைந்த செதில்களையும் கொண்டது. மேல் உதடு மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள மஞ்சள் நிறம் தலையை நோக்கி கண் வரை பரந்திருக்கும்.


உடல் தட்டையான உருளை வடிவத்தைக் கொண்டது, அகலத்தை விட உயரமானது. இதன் மேற்பகுதி தனித்துவமான நீலங்கலந்த நரைநிற மறை கொண்டதாக காணப்படும். வயிறு மஞ்சள் கலந்த கீழ்ப்பற செதில்களைக் கொண்டதாக மூன்றில் ஒன்று முதல் அரைப் பங்கு வரைக் காணப்படும். பாம்பின் முழு நீளத்திற்கும் சீரான இடைவெளியில் அமைந்த கறுப்பு வளையங்கள் காணப்படும். ஆனால் வயிற்றுப் பகுதியில் இவ்வளையங்கள் குறுகியதாக அல்லது தடைப்பட்டு காணப்படும். நடு உடலில் 21 முதல் 25 வரையான நீள வரிசைகள் மேற்படிந்த செதில்கள் காணப்படும். பாம்பின் வால் நீந்துவதற்குரியதாக துடுப்புப் போன்று காணப்படும்.


சராசரியாக ஆண் பாம்பின் மொத்த நீளம் 875 mm (34.4 in) உடையதாகவும், வால் 130 mm (5.1 in) நீளமாகவும் இருக்கும். பெண் பாம்பு குறிப்பிடத்தக்களவு பெரிதாக சராசரி நீளம் 1,420 mm (56 in) மற்றும் வால் 145 mm (5.7 in)கொண்டிருக்கும்.


பரம்பலும் வாழிடமும்


மஞ்சள் வாய் கடல் விரியன் கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்குப் பசிபிக் பெருங்கடல் வரைப் பரந்து காணப்படுகின்றது. இது இந்தியாவின் கிழக்குக் கரை, வங்காளதேசத்தின் வங்காள விரிகுடாக் கடல் ஓரம், மியன்மார், தெற்காசியாவின் மற்றைய பகுதிகளில் இருந்து மலாய் தீவுக்கூட்டம் மற்றும் சீனா, தாய்வான் ஆகியவற்றின் சில பகுதிகள்,யப்பானின் ரிக்யூ தீவுகள்ஆகியவற்றில் காணப்படுகின்றது. இவ்வினம் பிஜி ஏனைய பசிபிக் தீவுகளில் பொதுவாகக் காணப்படும். அவுத்திரெலியா, நியூ கலிடோணியா, நியூ சீலாந்து ஆகியவற்றில் இவை உள்ளதாக நாடோடிகளின் பதிவுகள் காட்டுகின்றன.


நடத்தைகள்


மஞ்சள் வாய்க் கடல் விரியன் பகுதி நீர் வாழ்க்கைக்குரிய விலங்கு ஆகும். இளமைப் பருவத்தை நீரிலும் கரையோர தரையிலும் கழிக்கும். முதிர்ந்த விலங்குகள் தரையில் மேலும் ஊடுருவி அதன் பாதியளவு காலத்தைக் கழிக்கும். ஆண்கள் தமது புணர்ச்சிக் காலத்தில் தரையில் செயலூக்கம் கூடியவையாகவும் ஆழம் குறைந்த நீரில் வேட்டையாடுவதாகவும், பெண் புணர்ச்சிக்காலத்தில் தரையில் செயலூக்கம் குறைந்ததாகவும் ஆழமான நீரில் வேட்டையாடுவதாவும் காணப்படும். ஏனெனில் ஆண்கள் நீளம் குறைந்தவை என்பதால் வேகமாக ஊர்வதும் நீந்துவதும் அவற்றால் முடியும்.


வெளி இணைப்புகள்

மஞ்சள் வாய் கடல் விரியன் – விக்கிப்பீடியா

Yellow-lipped sea krait – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.