புருக்கேசியா நானா, என்றும் நானோ பச்சோந்தி என அழைக்கப்படுவது பச்சோந்தியில் ஒரு வகைச் சிற்றினமாகும். இது வடக்கு மடகாசுகரில் உள்ள மோண்டேன் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் உலகின் மிகச் சிறிய ஊர்வனவாம். இந்தச் சிற்றினம் குறித்து 2021இல் முதன்முதலாக விவரிக்கப்பட்டது. பழுப்பு நிறமான இந்த பச்சோந்தியின் முதிர்ந்த ஆணின் மொத்த நீளம் 22 மி.மீட்டரும், பெண்ணின் நீளம் 29 மி.மீட்டர் ஆகும். மற்ற பச்சோந்திகளைப் போலல்லாமல், புரூக்கேசியா நானா வண்ணங்களை மாற்றாமலும் காட்டில் உள்ள மரங்களில் வாழாமலும், வனங்களின் தளத்தை விரும்புகிறது. மற்ற புரூக்கேசியா பேரினத்தின் சிற்றினங்களைப் போல, பெண்களும் பொதுவாக ஆண்களை விட பெரியவை. மற்ற முதுகெலும்பிகள் முதிர்ச்சியடையும் போது இவை ஏன் சிறியதாக இருக்கிறது என்பது ஒரு மர்மமாகும்.
வடக்கு மடகாசுகரில் உள்ள சோராட்டா மாசிபில் மழைக்காடுகளில் 2021ஆம் ஆண்டில் ஹெர்பெட்டாலஜிஸ்ட் ஃபிராங்க் கிளா மற்றும் பிற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தைக் கண்டுபிடித்தனர். மடகாஸ்கரில் காடழிப்பு காரணமாக இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று தெரிகிறது.
வெளி இணைப்புகள்
புருக்கேசியா நானா – விக்கிப்பீடியா