இயேசுப் பல்லி

இயேசுப் பல்லி (Common Basilisk, Jesus Christ Lizard, Jesus Lizardம் உயிரியல் பெயர்: Basiliscus basiliscus) என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது. இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப்படுகிறது.


பெயரியல்


கிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானது. அப்புராணக் கதையின் படி, இது பாம்புகளின் அரசன். மேலும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது.[கு 5]


βασιλίσκος (பாசிலி’சுகோசு’)என்ற கிரேக்க சொல்லுக்கு குட்டிஅரசன்/சிற்றரசன் என்பது பொருள் மொழியை, 1758 ஆம் ஆண்டு லின்னேயசு வெளியிட்ட, இயற்கை முறைமை புத்தகத்தின் 10வது பதிப்பில் காணலாம்.


சூழியல்


இந்த சிற்றினம் கடல் மட்டத்திலிருந்து 600மீட்டர் உயரித்திலேயே, பெரும்பாலும் தனது வாழிடத்தை அமைத்துக் கொள்கிறது. எனினும், கோசுட்டா ரிக்கா நாட்டின் சில இடங்களில் 1200மீட்டர் உயரத்திலும் காணப்படுகிறது. இரு அமெரிக்க நிலப்பகுதிகளிலும் அமைந்துள்ள, பசிபிக் பெருங்கடல் பக்கமே, இது தனது வாழ்விடங்களைச் சிறப்பாக அமைத்துள்ளது. வட அமெரிக்கப் பகுதியான புளோரிடா (அ.ஐ.) மாநிலத்தில், இந்த சிற்றினம் அறிமுகப்(en:Feral) படுத்தப்பட்டுள்ளது.


இதன் எதிரிகள்:எலிப் பாம்பும்(Spilotes pullatus), ஆமையும்(Chelydridae) இதன் முதன்மையான எதிரிகள் ஆகும்.


சிறப்பியல்பு


 • இது அனைத்துண்ணி ஆகும். குறிப்பாக பூக்கள், பாம்புகள், பறவைகள்,முட்டைகள், மீன்கள் முதலியவற்றை உண்ணும் இயல்பைப் பெற்றிருக்கிறது.

 • எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க, பின்னங்கால்களை மட்டும் பயன்படுத்தி, வேகமாக நீரின் மீது நடந்து கடக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. பின்னங்கால்களின் அடிப்புறம் சிறுகாற்றுப்பை அமைந்துள்ளது. இதனால் நீரின் மேல் நடக்கும் இயல்பினைப் பெறுகிறது என அறிவியலாளர் கணித்துள்ளனர்.இதன் உடலின் எடை குறைவாக இருப்பதாலும், நீரில் நடப்பது எளிதாகிறது. இதன் சிறியபல்லிகள், 10-20மீட்டர் கடக்கும் திறனைப் பெற்றுள்ளது. மனிதனும் இதே போன்று நீரில் கடக்க, மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் நடக்க வேண்டும் என்று அறிவியலாளர் கணித்துள்ளனர்.
 • வெளி இணைப்புகள்

  இயேசுப் பல்லி – விக்கிப்பீடியா

  Common basilisk – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.