மேற்குத் தொடர்ச்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் (Western Ghats flying lizard) இவை இந்தியக் நாட்டில் காணப்படும் ஊர்வன வகையைச் சார்ந்த பல்லியோந்திகள் சார்ந்த இனங்கள் ஆகும். இவற்றின் விலாப்பகுதியில் காணப்படும் வௌவாலின் இறக்கைச் (Patagium) சவ்வு போன்ற தோலின் உதவியுடன் மரம் விட்டு மரம் பறப்பதுபோல் தாவிச்செல்லும் பழக்கம் கொண்டுள்ளது. இவை தமிழக வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் கர்நாடகா, கேரளம் மற்றும் கோவாவின் காட்டுப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் – விக்கிப்பீடியா