மரவட்டை

மரவட்டை ( Millipedes ) என்பவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். இவை உடலில் துண்டத்துக்கு இரு சோடி கால்கள் என கொண்டிருப்பவை. பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை. இருப்பினும் சில மரவட்டைகள் முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையானவையாகவும், நீளத்தில் மிகவும் குறுகியவையாக இருக்கும். அவற்றால் தங்கள் உடலை ஒரு பந்து போல் சுருட்டிக் கொள்ள முடியும். மரவட்டைக்கு ஆங்கிலச்சொல் ’millipede’ என்பதாகும். Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும் என்றாலும் ஆயிரங்கால்களைக் கொண்டதாக இதுவரை எந்தவொரு மரவட்டை இனமும் அறியப்படவில்லை. இருந்தபோதும், Illacme plenipes எனும் அரிய மரவட்டை இனம் 750 கால்கள் வரை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மரவட்டைகளில் சுமார் 12,000 இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் சுமார் 140 குடும்பங்கள், கொண்டு பலகாலிகளில் பெரிய வர்க்கமாக உள்ளது. மரவட்டைகள், பூரான் போன்ற பலகால் உயிரினங்கள் கணுக்காலி குழுவைச் சேர்ந்தவை.


பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும். பெரும்பாலான மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளையும் சாப்பிடக்கூடியன. ஆண் மரவட்டைகள் தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறன. சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை தாவர உண்ணிகளாகும். இவற்றின் வாய் நுண்ணியதாக இருப்பதால் மனிதர்களை இவற்றால் கடிக்க இயலாது.


இவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன. சிறப்பாக இவை பசுமைக்குடில்களில் வளரும் நாற்றுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. மரவட்டைகள் ஏற்படுத்திய சேதத்தினை, இளந் தாவரத் தண்டின் வெளிப் பட்டைகள் சிதைக்கப்பட்டிருத்தல், இலைகளிலும் தாவர முனைப்பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற சேதம் போன்ற அறிகுறிகளை வைத்து இனங்காணலாம். பெரும்பாலான மரவட்டைகளின் உடலில் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களைச் சுரக்கின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இனப்பெருக்கத்திற்கான விந்துக்கள் ஆண் மரவட்டைகளின் கால்கள் மூலம் பெண் மரவட்டைகளுக்கு அனுப்பப்படுகிறது.


மரவட்டைகள் மிகப் பழமையான சில நிலவிலங்குகளில் ஒன்றாகும். இவை சிலுரியக் காலத்திலேயே காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தையகால மரவட்டைகளில் சில இனங்கள் அதிகபட்சமாக 2 மீ (6 அடி 7 அங்குலம்) வரை வளர்ந்திருக்கின்றன. தற்கால நீண்ட மரவட்டைகள் 27 முதல் 38 செமீ (11 முதல் 15 அங்குலம்) வரை காணப்படுகின்றன. நீண்ட மரவட்டை இனங்கள் மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டை ( Archispirostreptus gigas ) இனமாகும்.


வெளி இணைப்புகள்

மரவட்டை – விக்கிப்பீடியா

Millipede – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *