பச்சையரத்த அரணை (Prasinohaema) என்பது பச்சையான அரத்தம் கொண்ட ஓர் அரணைப் பேரினம். இந்த அரணைப்பேரினம் நியூகினியிலும் சாலமன் தீவுகளிலும் வாழ்கின்ற ஓர் பேரினம். இதன் அறிவியல் உயிரினப்பெயரில் உள்ள பிரசினோ (Prasino, Πράσινο) என்பது பச்சை என்னும் பொருள் கொண்ட கிரேக்கச்சொல். அறிவியற் பெயரின் பின்பகுதியாக உள்ள haema என்பது சிவப்பு என்னும் பொருள்தரும் அரத்தத்தைக் குறிக்கும் கிரேக்கச்சொல். இந்தப் பச்சையரணையின் அரத்தம் பச்சை நிறமாக இருப்பதற்குக்காரணம் இதன் அரத்தத்தில் பிலிவெர்டின் என்னும் பித்தநீர்ப்பொருள் இருப்பதால் . மாந்தர்களுக்கு ஏற்படும் மஞ்சள்காமாலை நோய் இருக்கும் பொழுதும் இந்தப் பித்தப்பொருள் உடலில் கூடுதலாக இருக்கும். மஞ்சக்காமாலை இருக்குபொழுது இருக்கும் பித்தத்தைப் போல 40 மடங்கு அதிகமானதாக இருக்கும் இந்த அரணையில். பச்சையான அரத்தம் உள்ள மீனின் அரத்தத்தைப் போல 1.5 முதல் 30 மடங்கு கூடுதலாகப் பித்தப்பொருள் இருக்கும். ஏன் இப்படி அதிகமாக பிலிவெர்டின் இருக்கின்றது என்று தெரியவில்லை, ஆனால் மலேரியாவைத் தடுப்பதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதன் நாக்கும் எலும்பும், தசைகளும் கூட பச்சை நிறமாக இருக்கும் .
நிலப்பரம்பல்
இந்தப் பச்சையரத்த அரணைகள் நியூகினியிலும் சாலமன் தீவுகளிலும் காணப்படுகின்றன.
இனங்கள்
இந்தப் பச்சையரத்த அரணைப் பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன: