Acontinae
Lygosominae
Scincinae (அனேகமாக paraphyletic)
For |பேரினம், see #Genera.
அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லியோந்திகள் ஆகும். சின்சிடே குடும்பத்தில் 1500 வகையான உயிரினங்கள் உள்ளன . இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாகும். வெப்பமான வேளைகளில் மட்டுமே இவை வெளியில் இயங்குகின்றன. இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும். நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கிவிடும்.
பெண் அரணை முட்டைகளுடன்
ஆத்திரேலிய அரணை
இந்திய அரணை
இலங்கையில் காணப்படும் அரணை
உடலமைப்பு
அரணையின் தோல் உலர்ந்தது. கொம்புச் செதில்கள் எனும் படிவைக் கொண்டு மூடிக் கொண்டிருக்கும். இத்தோல் அதன் உடலை வறண்ட காற்றில் நீர் ஆவி ஆகாதபடி காக்கிறது. இவை தோலினால் மூச்சு விடுவதில்லை. கோடைக் காலத்தில் அரணை அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும். உள்ளிருந்து வளரும் புதிய படிவு பழைய தோலுக்கு அடியில் உருவானதும் தோலின் கொம்புப் பொருளிலான படிவு சீரற்ற துண்டுகளாகப் பிரிந்து விழுந்து விடுகின்றன.
நிறம்
ஆண் அரணை பச்சை நிறமும், பெண் அரணை சாம்பல் கலந்த பழுப்பு நிறமும் உடையது. இதனால் அரணை தரையிலும், புல்வெளிகளிலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. பிராசினோகீமா பேரின அரணைகளின் நிறம் பசுமை கலந்த இரத்த சிவப்பாக காணப்படும். பைல்விர்டின் எனும் பித்த நிறமி கழிவுப்பொருளாகச் சேர்வதால் இந்நிறம் தோன்றுகிறது.
உணவு
அரணை, ஊனுண்ணி வகையினைச் சார்ந்தது. அதிகமாக பூச்சிகளை உண்ணக்கூடியன. பூச்சிகள், சிலந்தி, புழுக்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. அரணைகளுக்கு உண்ணும் உயிரினங்களின் உடலிலுள்ள நீரும், பனித்துளிகளும் போதுமானதாக இருக்கின்றன. இவை உண்ணும் உணவில் 60% தாவர உணவாகவும் 40% மாமிச உணவாகவும் உள்ளது.
பாதுகாப்பு
அரணைகள் பகைவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள அதன் வாலை முறித்துக் கொண்டு ஓடி ஒளிந்து விடுகின்றன. இப்படி வாலை முறித்துக் கொள்வது தன் உறுப்பு முறிவு என்று சொல்லப்படுகிறது. வாலை இழந்து உயிரைக் காத்துக் கொள்ளும் வாய்ப்பு அதற்கு உள்ளது. இதன் வால் சில நாட்களில் மறுபடி வளர்ந்து விடுகிறது.
விக்கிக் காட்சியகம்
யூமெசெசு ஆந்த்ராசினசு
யூலம்ப்ரசு குயோய்
யூமெசெசு பாசியாட்டசு
ரிசுடெல்லா திருவிதாங்கோரிகா
ஒலிகோசோமா ஓடஜென்சி
எஜெர்னியா கிங்கி
டிராச்சிலெபிசு இசுடெரைட்டா
நோவோஎம்மெசெசு (யூமெசெசு) சிண்டேரி