நீலவால் அரணை (பிளசித்தோதோன் சுகிற்றோனியனசு, Plestiodon skiltonianus) ஒரு சிறிய மழமழப்பான அரணை வகை. இது புறத்தே செதில்கள் கொண்டதும் சிறு கைகால்களைக்கொண்டதுமான பல்லியோந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரணை. இள அரணைகளுக்கு நீலநிற வால் இருப்பதால் நீலவால் அரணை என்று பெயர். இது அமெரிக்கா கனடாவின் மேற்குப்பகுதியில் காணப்படுவதால் மேற்கரணை (Western skink) என்றும் பெயர். இது பொதுவாக 100 மிமீ முதல் 210 மிமீ வரை நீளம் (உடலும் வாலும் சேர்ந்து) உடையதாக இருக்கும். கனடாவில் காணப்படும் ஐந்து வகை அரணைகளில் இதுவும் ஒன்று. தன் உடல்வெப்பநிலையைத் தானே கட்டுப்படுத்த உடலமைப்பு கொண்டதால், பெரும்பாலானான நேரம் வெயிலில் ‘காய்ந்து’கொண்டு இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 2100 மீ உயரம் வரையும் உள்ள பகுதிகளில் வாழ்கின்றது. இதன் உணவில் சிலந்திகளும் வண்டுகளும் அடங்கும். இந்த நீலவால் அரணையைப் பிடித்தால் கடிக்கும். அச்சம் இருந்தால் ஓடி மறைந்துவிடும். இவை மறைவாக இருந்து வாழ்பவை. இதன் வாழிடப் பகுதிகளில் கனடாவின் பிரித்தானிய கொலம்பியா (பிரிட்டிசுக் கொலம்பியா) முதல் அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலம் ஒரேகான் மாநிலம், நெவாடா, இயூட்டா, ஐடகோ, வயோமிங்கு, மேற்கு மோண்டானா, வட அரிசோனா, மிசௌரி வரை ஆகும். தெக்குசாசு மாநிலத்தின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன கலிபோர்னியாவின் வட பகுதிகளிலும், ஆனால் கரையோரப் பகுதிகளில் மட்டும் காணப்படும் Western skinks are found from sea level to at least 2,130 m (7,000 ft). இது பகலில் உலவும் பகலாடி ஊர்வன வகை
உயிரின வகைப்பாடு
முதலில் சுபென்சர் பேயரடு என்பவராலும், சாரலசு கிரார்து என்பவராலும் 1882 இல் விரித்துரைக்கப்பெற்றது. அமெரிக்க மருத்துவரும் இயறகையியலாளருமான மருத்துவர் ஏவரி சாடு சுகிற்றன் (Avery Judd Skilton) (1802–1858) என்பவரின் பெயரில் இந்த நீலவால் அரணையின் சிறப்புப்பெயர் வைக்கப்பட்டது. இவர்தான் முதலில் இவ்வகை அரணைகள் சிலவற்றைச் சேகரித்தவர்.
மூன்று சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன.
இது கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியிலும் மெக்சிக்கோவின் பாயா கலிபோர்னியாவிலும் காணப்படுகின்றது
இயூட்டா மாநிலத்தில் காணப்படுகின்றது.
பரவலாகக் காணப்படும் சுகிற்றோன் அரணை இராக்கி மலைகளுக்கு மேற்கே மேற்கு அமெரிக்கா முழுவதிலும் கனடாவின் தெற்கு பிரித்தானிய கொலம்பியாவிலும் காணப்படுகின்றது.
தற்காப்பு நடத்தை
இளம் மேற்கரணைகள் நீலநிற வால் கொண்டிருக்கும். வளரவளர இந்நிறம் மங்கிமாறிவிடும். அரணைகள் வாலறு தன்மை கொண்டவை. பிடிபட்டால், வாலை விரைவாக ஆட்டி பிடித்தவர் கவனத்தைச் சிதறச்செய்து, வாலை அறுத்துக்கோண்டு ஓடிவிடும். இன் நடத்தை தன்னுறுப்புத்துணிப்பு (autotomy) எனப்படும். இந்த வால் பின்னர் வளர்ந்துவிடும். ஆனால் வளரும் வால் சற்று கறுத்த நிறமாக இருக்கும்
வாழ்க்கை
இந்த அரணை கோடை போன்ற வெப்பநாட்களில் பகலில் உலவும் பகலாடி. காலையிலும் பிற்பகலின் பிற்பகுதியிலும் பெரிதும் உலவுகின்றன, ஆனால் வெப்பம் அதிகம் இல்லாவிடில் நாள்முழுவதும் உலாத்தும். வளர்ந்த அரணைகள் இலையுதிர் காலத்தில் நடவடிக்கைகள் குன்றியிருக்கும் ஆனால் இளம் அரணைகள் இன்னும் பல கிழமைகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
இதன் இனப்பெருக்கக் காலம் இடத்துக்கு ஏற்ப மாறுபடும் இளவேனில் அல்லது இலை துளிர்க்காலத்தில் இனப்பெருக்கம் தொடங்குகின்றது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் அரணைகளின் அடிப்பக்கம் செம்மஞ்சள் நிறமாக இருக்கும் பெண் அரணைகள் 2-6 முட்டைகளை சூன் சூலை மாதங்களில் இடுகின்றன. இறுக்கமாக இல்லாத மண் பகுதிகளில் பெண் அரணைகள் சில செ.மீ ஆழத்தில் வளை கட்டுகின்றன. பெரும்பாலும் கல், சாய்ந்த மரம் போன்ற பகுதிகளுக்கு அடியில் வளை கட்டுகின்றன
இளம் நீலவால் அரணைகள் கோடைக்காலத்தின் பிற்பகுதியில் முட்டை பொரிக்கின்றன. பிறந்து இரண்டாண்டுகளில் இனப்பெருக்க முதிர்ச்சி பெற்றுவிடுகின்றன என்றாலும் மூன்றாண்டுகள் கழித்து இனப்பெருக்கம் செய்யத்தொடங்குகின்றன. ஏறத்தாழ 10 ஆண்டுகள் வாழ்கின்றன.