மான் பன்றி (Babirusa) என்னும் ஒருவகைப் பன்றிக் குடும்பத்துப் பேரினம் இந்தோனேசியத் தீவுகளில் ஒரு மாநிலமான மலுக்குத் தீவுகளில் உள்ள புரு, சுலா ஆகிய தீவுகளில் வாழ்கின்றன. இப் பேரினத்தில் நான்கு கொம்புகள் கொண்ட சுலாவெசி நாற்கொம்புப் பன்றி ஓரளவுக்கு அறியப்பட்ட விலங்கு. நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த் தாடையில் உள்ள நாய்ப் பற்கள் அல்லது புலிப் பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேற்றாடையில் இருந்தும் நடுவே நெற்றிப்புறமாக வளைந்து உள்ள மேலும் இரண்டும் கொம்புகளும் எயிறே. இப் பேரினத்தில் உள்ள விலங்குகள் சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
பெயர்க்காணம்
Babirusa என்றால் இந்தோனேசிய மொழியில் மான் பன்றி என்று பொருள்.
இனங்கள்
†Babyrousa bolabatuensis (subfossil)
சுலாவெசி நாற்கொம்புப் பன்றி, சுலாவெசி முக்கொம்புப் பன்றி, அறிவியற் பெயர்: பபிரூசா செலெபென்சிசு (Babyrousa celebensis ).
Togian Babirusa, Babyrousa togeanensis.