சதுப்புநில மான் (barasingha) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வடக்கு, மத்திய இந்தியாவிலும், நேபாளம், வங்கதேசம், பாக்கித்தான் போன்ற இடங்களிலும் காணப்படுகின்ற மான் ஆகும். இவை இந்தியாவில் உத்தரப்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகள் அல்லது வறண்ட புல்வெளிகள் நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இம்மான் மத்தியப் பிரதேசத்தின் மாநில விலங்காகும்.
இவை கிளைகள் கொண்ட கொம்புகளுடன் அழகாக் காணப்படும். இதற்கு அழகான உரோமம் உள்ளதால் உடல் மினுமினுப்பாக காணப்படும். கோடைக்காலத்தில் இதன் நிறம் மங்கிவிடும். இவை மந்தையாகக் காணப்படும். இனச்சேர்க்கையினபோது மட்டும் ஆண்மான்கள் பெண்மான்களுடன் காணப்படும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆண்மான் பெண்மானைவிட்டுப் பிரிந்து ஆண்மான்களுடன் மந்தை அமைத்துக்கொள்ளும்.
வெளி இணைப்புகள்
சதுப்புநில மான் – விக்கிப்பீடியா