சருகுமான்

சருகுமான் (Mouse Deer) என்பது சிறிய, குளம்புள்ள உயிரினம் ஆகும். இவை தென், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை தாவர பொருள்களான புற்களையும், இலைகளையும் உணவுவாக கொள்கின்றன. இவைற்றில் ஆசிய இனங்கள் 0.7 – 8.0 கிலோகிராமுக்கு (1.5 – 17.6 இறாத்தலுக்கு) இடைப்பட்ட எடையும் உள்ளவை இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும். ஆப்பிரிக்க சருகுமான் 7-16 கிலோகிராம் (15-35 இறாத்தல்) எடையுள்ளவை பிற சருகுமான் இனத்தைவிட இவை பெரியதாகும்.


சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் சைத்தூன் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.


பெயரீடு


சருகுமான்களில் நான்கு இனங்களே இருப்பதாக முன்னர் அறியப்பட்டது. 2004 ஆம் ஆண்டு T. nigricans, T. versicolor என்பன முறையே நாப்பு சருகுமான் (T. napu), கஞ்சில் சருகுமான் (T. kanchil) ஆகியவற்றிலிருந்தும், வில்லியம்சன் சருகுமான் (T. williamsoni) என்பது சாவகச் சருகுமான் (T. javanicus) இனத்திலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளிச் சருகுமான் (M. indica), மஞ்சட் கோட்டுச் சருகுமான் (M. kathygre) என்பன இலங்கை புள்ளிச் சருகுமான் அல்லது வெண் புள்ளிச் சருகுமான் (M. meminna) எனப்படும் இனத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இதனால் இவை பத்து இனங்களாயின.


 • சருகுமான் குடும்பம்
  நீர்ச் சருகுமான்
  நீர்ச் சருகுமான், Hyemoschus aquaticus
  நிலச் சருகுமான்
  இந்திய புள்ளிச் சருகுமான், Moschiola indica
  வெண் புள்ளிச் சருகுமான், Moschiola meminna
  மஞ்சட் கோட்டுச் சருகுமான், Moschiola kathygre
  கூர்ப்பற் சருகுமான்
  சாவகச் சருகுமான், Tragulus javanicus
  கஞ்சில் சருகுமான் , Tragulus kanchil
  நாப்பு சருகுமான், Tragulus napu
  பிலாண்டோ சருகுமான், Tragulus nigricans
  வெள்ளிச் சருகுமான், Tragulus versicolor
  வில்லியம்சன் சருகுமான், Tragulus williamsoni

 • நீர்ச் சருகுமான்
  நீர்ச் சருகுமான், Hyemoschus aquaticus

 • நீர்ச் சருகுமான், Hyemoschus aquaticus

 • நிலச் சருகுமான்
  இந்திய புள்ளிச் சருகுமான், Moschiola indica
  வெண் புள்ளிச் சருகுமான், Moschiola meminna
  மஞ்சட் கோட்டுச் சருகுமான், Moschiola kathygre

 • இந்திய புள்ளிச் சருகுமான், Moschiola indica

 • வெண் புள்ளிச் சருகுமான், Moschiola meminna

 • மஞ்சட் கோட்டுச் சருகுமான், Moschiola kathygre

 • கூர்ப்பற் சருகுமான்
  சாவகச் சருகுமான், Tragulus javanicus
  கஞ்சில் சருகுமான் , Tragulus kanchil
  நாப்பு சருகுமான், Tragulus napu
  பிலாண்டோ சருகுமான், Tragulus nigricans
  வெள்ளிச் சருகுமான், Tragulus versicolor
  வில்லியம்சன் சருகுமான், Tragulus williamsoni

 • சாவகச் சருகுமான், Tragulus javanicus

 • கஞ்சில் சருகுமான் , Tragulus kanchil

 • நாப்பு சருகுமான், Tragulus napu

 • பிலாண்டோ சருகுமான், Tragulus nigricans

 • வெள்ளிச் சருகுமான், Tragulus versicolor

 • வில்லியம்சன் சருகுமான், Tragulus williamsoni

 • வெளி இணைப்புகள்

  சருகுமான் – விக்கிப்பீடியா

  Chevrotain – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.