வெண்தலைக் கப்புசின் குரங்கு

வெண்தலைக் கவிகைக் குரங்கு (Cebus capucinus) அல்லது வெண்தலைக் கப்புச்சின் (White-headed capuchin, white-faced capuchin அல்லது white-throated capuchin) என்பன செபிடே, குடும்பத்தின் உட்குடும்பமான செபினே குடும்பத்தின் ஒரு நடுத்தர அளவுள்ள புதிய உலகக் குரங்கு வகையைச் சேர்ந்ததாகும். இவ்வகைக் குரங்குகள் நடு அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதி ஆகியவற்றைப் பூர்விகமாகக் கொண்டவை. இவை மழைக்காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. உணவுச் சங்கிலியில் தாவரங்களின் விதைகளை பரப்பதுவதிலும் மகரந்தச் சேர்க்கையிலும் இவ்வகை குரங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.


சமீப காலமாக தென் அமெரிக்க ஊடகங்களில் வெள்ளைநிறக் கப்புச்சின் குரங்குகள் மிகவும் புகழ்பெற்றுள்ளன. வெள்ளைநிறக் கப்புச்சின் குரங்குகள் மிகவும் நுட்ப அறிவு கொண்டவை. கீழங்கவாதம் உடையவர்களுக்கு உதவுவதற்காக இவ்வகை குரங்குகள் பயிற்றுவிக்கபடுகின்றது. வெள்ளைநிறக் கப்புசின் குரங்குகள் நடுத்தரமான உடல் அமைப்பை கெண்டிருக்கின்றன . இவ்வகை குரங்குகள் அதிகப்பட்சமாக 3 .9 கிலோ உடல் எடையை கொண்டிருக்கும். இவ்வகை குரங்குகள் கருமை நிறத்திலே இருக்கும்.ஆனால் அவைகளின் முகம் வெள்ளை நிறத்திலும் முன் பக்க உடல் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் அமைத்திருப்பதால் அவைகள் வெள்ளைநிறக் கப்புசின் குரங்குகள் என அழைக்கபடுகின்றன. சிறப்பு தன்மையான கிளைளைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் உடைய அவைகளுடைய கறுத்த வால்கள் எளிதாக மரங்களை ஏறுவதற்கும், ஏறும்பொழுது உடல் எடையை சம நிலை செய்வதற்கும் உறுதுணையாக இருக்கிறது.


சுற்றுண் சூழ்நிலைக்கு ஏற்றது போல் தன் வாழ்க்கை முறையை மாற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டவை வெள்ளைநிறக் கப்புசின் குரங்குகள். ஆதனால் அவைகள் பல வகை காடுகளில் பரவியுள்ளன . சூழ்நிலைகளை ஏற்றாற் போல் சுற்று சூழலில் கிடைக்கின்ற பழங்கள், கிழங்குகள், பூச்சிகள் போன்றவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. வெள்ளைநிறக் கப்புசின் குரங்குகள் கூட்டம் கூட்டமாகவே வாழும். சராசரியாக ஒரு கூட்டத்தில் ஆண்,பெண் என 20 குரங்குகள் வரை இடம்பெற்றிருக்கும். பொதுவாக நம்மிடையே உயிரினங்களில் மனிதர்களால் மட்டுமே ஒரு பொருளை கருவியாக பயன்படுத்தவும் வடிவமைப்பவும் முடியும் என்கின்றக் கருத்து நிலவுகின்றது. ஆனால் வெள்ளைநிறக் கப்புசின் குரங்குகளும் ஒரு பொருளைக் கருவியாக பயன்படுத்தும் அறிவைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறக் கப்புசின் குரங்குகள் கடினமான தோலுடைய பீன் நெட் (pine nut ) என்கின்ற ஒரு வகை பழங்களை உடைத்து அதில் இருக்கும் பருக்கை வெளியெடுக்கக் கற்களைப் பயன்படுத்துகின்றன . மேலும் குறிப்பட்ட மூலிகை தாவரங்கள் மீது உடலை தேய்த்து கொள்வதும் கருவிகளை பயன்படுத்தி உணவை தேடுவதும் இக்குரங்களிடையே காணபடுகின்ற சிறப்புத் தன்மையாக கருதப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

வெண்தலைக் கப்புசின் – விக்கிப்பீடியா

Colombian white-faced capuchin – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.