நண்டு உண்ணும் குரங்கு

நண்டு உண்ணும் குரங்கு அல்லது நீண்ட வால் குரங்கு( ஆங்கிலத்தில்: crab-eating macaque, long-tailed macaque) தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை குரங்கு ஆகும். இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உண்டு; இது விவசாயப் பூச்சிகளோடும், சில கோவில்களில் புனித சின்னமாகவும், மேலும் சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஆய்வுப்பொருளாகவும் காணப்படுகிறது. நண்டு உண்ணும் குரங்குகளின் பிரிவு பெண் குரங்கின் ஆதிக்கத்துடன் தாய்வழி மரபை பின்பற்றும் வம்சமாக உள்ளது, மற்றும் ஆண் குரங்கு பருவ வயதினை அடைந்துவிட்டால் குழுவை விட்டுச் சென்றுவிடும். மனித இனப்பெருக்கமும், மனிதர்களின் வாழிடமும் குரங்குகளின் வாழியல் இடத்தினை ஆக்கிரமிப்பதால் குரங்குகளின் வாழ்வியல் சூழல் குறைகிறது.


நண்டு உண்ணும் குரங்கு, பெயருக்கேற்றவாறு நண்டுகளை மட்டும் உண்பதில்லை, இவைகள் அணைத்துண்ணி வகையாகும் பல்வேறு விலங்கினங்களையும், தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும். அதன் உணவுத் தேவையை பொதுவாக பழங்களும், விதைகளுமே 60 – 90% பூர்த்திசெய்கிறது. தங்கள் உணவுத்தேவைகளை கருவிகளைப் பயன்படுத்தி தாமே பூர்த்திசெய்வதாக மியான்மரிலும் தாய்லாந்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

நண்டு உண்ணும் குரங்கு – விக்கிப்பீடியா

Crab-eating macaque – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.