கியூபா மலர் வௌவால் (Cuban flower bat, Phyllonycteris poeyi, அல்லது Poey’s flower bat) என்பது பிலோஸ்டோமிடே குடும்பத்தைச் சேர்ந்த வௌவால்கள் ஆகும். இவை கியூபா, எயிட்டி, டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
இந்த வௌவாலின் முகம் நாய் முகம் போலக் காணப்பபடும்.இதன் நாக்கு மிக நீளமானது. மலர்களிலுள்ள தேன், மகரந்தப்பொடிகள் ஆகியவற்றை உண்ணும். அடர்த்தியற்ற காடுகளில் பாறை இடுக்குகள், குகைகளில் கூட்டங்கூட்டமாய் இவை வாழ்கின்றன.
ஆண்டு முழுவதும் இவை இனவிருத்தி செய்கின்றன. உடல் அளவு: 7.5-9 செ.மீட்டர், இறக்கையின் அளவு:21-26 செ.மீட்டர், வாலின் நீளம்:1-1.5 செ.மீட்டர் ஆகும்.