வீட்டுப் பன்றி

வீட்டுப் பன்றி என்பது, வளர்ப்பு விலங்குகளுள் ஒன்று. இது இதன் இறைச்சிக்காகப் பெயர் பெற்றது. சில வீட்டுப் பன்றி வகைகளின் உடலில் கம்பளி போலத் தடித்த உரோமங்கள் காணப்படினும், பெரும்பாலான பன்றிகளின் உடலில் மிகவும் அரிதாகவே உரோமங்கள் காணப்படுகின்றன. வீட்டுப்பன்றிகள் பெரும்பாலும் அதிலிருந்து பெறப்படும் பன்றிக்கறிக்காகவே வளர்க்கப்படுகிறது. இருப்பினும் பானைவயிற்றுப் பன்றி (pot-bellied pig) மற்றும் குறும்பன்றி (micro pig) சில வீட்டுப்பன்றியினங்கள் சில வேளைகளில் செல்லப்பிரானிகளாக வளர்க்கப்படுகின்றன. இவ்விலங்கின் எலும்புகள், விறைப்பு முடி போன்றவை வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.


வகைப்பாட்டியல்


வீட்டுப் பன்றிகள், காட்டுப் பன்றிகள் எனப்படும் காட்டில் வாழும் பன்றி இனத்தின் ஒரு துணை இனம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. இதன்படி வீட்டுப் பன்றிகளின் அறிவியல் பெயர் சுசு இசுக்குரோஃபா டொமசுட்டிகசு (Sus scrofa domesticus) ஆகும். காட்டுப்பன்றி சுசு இசுக்குரோஃபா (Sus scrofa) என்னும் அறிவியல் பெயருடையது. இப்பெயரை கார்ல் லின்னேயஸ் அறிமுகப்படுத்தினார் . சில உயிரியலாளர்கள் வீட்டுப் பன்றிகள் தனியான இனத்தைச் சேர்ந்தவையாகக் கருதுகிறார்கள். இக் கருத்தின் அடிப்படையில் வீட்டுப் பன்றியின் அறிவியல் பெயர் சுசு டொமசுட்டிக்கசு (Sus domesticus) என்பதாகும்.


மிகப்பழைய காலத்திலேயே பன்றிகள் மனிதனோடு தொடர்பு பட்டிருந்ததற்குச் சான்றுகள் உண்டு. தப்பிச் சென்ற வீட்டுப் பன்றிகள் பல கட்டாக்காலியாக உலகின் பல பாகங்களிலும் உள்ளன. இவை சூழலுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கின்றன.


தோற்றம்


கிமு 13,000 – 12,700 காலப்பகுதியிலேயே டைகிரிசுப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. தற்காலத்தில் சில நியூ கினியர்கள் செய்வதுபோல் அக்காலத்திலும் காடுகளைலேயே வைத்துப் பன்றிகள் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. கிமு 11,400 ஆம் ஆண்டுக்குப் முற்பட்ட பன்றிகளில் எச்சங்கள் சைப்பிரசுப் பகுதியில் காணப்பட்டன. இப் பன்றிகள் தலைநிலத்தில் இருந்தே கொண்டுவரப் பட்டதாகக் கருதப்படுவதால், தலை நிலத்தில் பன்றி வளர்ப்பு முன்னரேயே தொடங்கியிருக்கக்கூடும் எனவுக் கூறுகின்றனர். சீனாவிலும் தனியாகப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இடம்பெற்றதாகத் தெரிகிறது.


இனப்பெருக்கம்


பெண் பன்றிகள் 3-12 மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. புணர்ச்சி செயல் நடைபெறாத போது ஒவ்வொரு 18-24 ஆம் நாட்களில் சினைப்பருவம் நடைபெறுகிறது. பன்றிகளின் சராசரி கருசுமக்கும் காலம் 112 முதல் 120 நாட்கள் ஆகும். சினைப்பருவம் இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும். அச்சமயத்தில் பெண் பன்றிகள் புணர்தலுக்கான தயார் நிலை சமிஞ்ஞைகளை வெளிப்படுத்தும் இதற்கு நிலைச் சூடு என அழைக்கப்படுகிறது. நிலைச்சூட்டு நிலையில் முதிர்ச்சியைடைந்த ஆண் பன்றியின் உமிழ்நீரை தீண்டும் போது பெண் பன்றி பாலுறவுக்கு தூண்டப்படுகிறது. ஆண்ட்ரோஸ்டீனால் (Androstenol) என்றழைக்கப்படும் ஒரு வகை இன ஈர்ப்புச் சுரப்புகளில் ஒன்றாகும். மேற்றாடைக்குக்கீழ்ப்பக்கம் அமைந்திருக்கும் உமிழ்நீர் சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்படும் இந்த சுரப்பு பெண் பன்றியின் பாலுணர்வு பிரதிபலிப்பை தூண்டுகிறது. தக்ககைத்திருகாணி வடிவ ஆண் பன்றியின் ஆணுறுப்பை பற்றிக்கொள்ளும் வகையிலான ஐந்து சதைமடிப்புகளுடன் கூடிய பெண் பன்றியின் கருப்பை வாய்ப் பகுதி அமைந்துள்ளது. பெண் பன்றிகளுக்கு இரட்டைக்கொம்புக் கருவகம் அமைந்துள்ளது. கருவுற்று 11- 12 ஆம் நாளில் கருவுற்றல் தகவேற்புச் செய்கை தென்படுகிறது.


நடத்தை


பல வழிகளில் வீட்டுப்பன்றியின் நடத்தையானது புலால் உண்ணிகள் மற்றும் இரட்டைக் குளம்புடைய விலங்கினங்களுக்கு (artiodactyls) இடைப்பட்டதாக வெளிப்படுகிறது. வீட்டுப் பன்றிகள் மற்ற பன்றிகளின் துணையோடு வாழ்வதையே விரும்புகின்றன. பெரும்பாலும் உடல் மூலம் தொடுதல் தொடர்புகளை தக்கவைத்துக்கொள்வது அதன் நடத்தைகளுள் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவை இயல்பாகவே பெரிய மந்தைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. பன்றிக்கூட்டம் பொதுவாக சுமார் 8-10 முதிர்ச்சியடைந்த பன்றிகள் கொண்ட குழுவாக காணப்படும். சில இளம் பன்றிகள் மற்றும் ஆண் பன்றிகள் தனித்தும் காணப்படக்கூடும்.


வியர்வை சுரப்பிகளின் குறைபாடு காரணமாக, பன்றிகள் பெரும்பாலும் நடத்தை வெப்பச் சீராக்கல் (behavioural thermoregulation) மூலம் தங்களின் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க சேற்றில் புரண்டு உடலில் சேற்றைப் பூசிக்கொள்கின்றன. இது பன்றிகளால் அடிக்கடி வெளிப்படும் ஒரு நடத்தை ஆகும். பன்றிகளின் உடலின் மீது பசை போன்ற பதத்தில் சேறு ஒட்டிக்கொள்கின்றன. மேலும் அவை சேற்றில் முழுவதுமாக மூழ்கி உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொள்வதில்லை. உடலில் ஒட்டியிருக்கும் சேற்றின் அளவானது சேற்றுக்குழியின் ஆழம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்தது. சுற்றுப்புற வெப்பநிலை சுமார் 17-21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்போது, வளர்ந்த பன்றிகள் சேற்றில் புரளத் தொடங்குகின்றன. வெப்பமான நாட்களில் பன்றிகள் தலையில் இருந்து கால் வரை தங்களை சேற்றால் மறைத்துக்கொள்கின்றன. இந்தச் சேற்றுப்பூச்சானது சூரியனிலிருந்து அரும் புற ஊதா கதிர்களில் இருந்து தோலினை பாதுகாத்துக் கொள்ளவும், ரோமம் மற்றும் தோலில் கானப்படும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாக அறியப்படுகிறது. சிறிது நேரம் உண்டு சிறிது நேரம் உறக்கம் கொள்ளும் அசைபோடும் விலங்குகளைப் போலன்றி நிலைமைகள் அனுமதிக்கும் பட்சத்தில் வீட்டுப் பன்றிகள் பல மணிநேரங்களுக்கு தொடர்ந்து உணவினை உட்கொள்கின்றன. அதே போல பல மணிநேரங்களுக்கு தூங்குகின்றன. . பன்றிகள் அனைதுண்ணி ஆகும். எனவே. பலதரப்பட்ட உணவினையும் உட்கொள்ளும் நடத்தை பன்றிகளிடம் காணப்படுகிறது. மனிதன் மற்றும் நாய்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் போலவே பன்றிகளும் உணவுப்பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்த இவை இலைகள், புற்கள், வேர்கள், பழங்கள், மற்றும் பூக்களை உட்கொண்டு வாழ்துள்ளன. வீட்டுப் பன்றிகள் புத்திக்கூர்மையுடையன. மேலும் அவற்றுக்குப் பல்வேறு பணிகள் மற்றும் தந்திரங்களை செய்ய பயிற்சி அளிக்க முடியும்.


கூடு உருவாக்கம்


புலால் உண்ணிகளைக் போலவே வீட்டுப்பன்றிகளும் குட்டி போடுவதற்கான கூடு கட்டுதல் மற்றும் சேற்றுப் படுக்கை உருவாக்குதல் (இருந்தபோதிலும் நவீன பன்றி வளர்ப்பு முறைகளில் இவை அடிக்கடி தவிர்க்கப்படுகின்றன ) போன்ற செயல்களைச் செய்கின்ற நடத்தைப் பண்புகள் காணப்படுகின்றன. பன்றிகள் தங்களது நீள்மூக்குப்பகுதியின் உதவியால் குழிகளைத் தோண்டுகின்றன அவற்றில் பெண் பன்றிகள் குட்டிகளை ஈனுகின்றன. முதலில் தனது உடல் அளவிற்கு ஏற்றவாறு அழுத்தி பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. பின்னர் சிறு குச்சிக்ள, புற்கள் மற்றும் இலைகளை தனது வாயின் உதவியால் பள்ளத்திற்கு கொண்டு வருகிது. அவற்றைக்கொண்டு ஒரு திட்டு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. திட்டின் மையப்பகுதியில் பாதங்களைக் கொண்டு மென்மையாக மாற்றுகின்றன. திட்டுப்பகுதி தேவையான உயரத்தை 2 மீட்டர் நீளத்தை அடைந்தவுடன் பன்றியானது அதன் மேல் படுத்த நிலையில் அமர்ந்து குட்டிகளை ஈனுகின்றன. இது மற்ற இரட்டைக் குளம்புடைய விலங்குகள் நின்று கொண்டு குட்டி ஈனும் பண்புக்கு மாறாக இருக்கின்றது.


கூடு கட்டும் நடத்தையானது குட்டி ஈனுதலுக்கு முன் மற்றும் பின் காலங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பன்றியானமு தான் குட்டி ஈனுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கூடு கட்டும் செயலை துவக்குகின்றன 12- 6 மணி முன்னதான இச்செயல் தீவிரமாக இருக்கக்கூடும். கூடு கட்டுதல் செயல்முறையானது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமானது குட்டி ஈனும் ஏற்ற இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தை சீர்செய்து மண் மேடு உருவாக்குதல். இரண்டாவது கட்டமாக கூடு கட்டுவதற்கான பொருட்களை சேகரித்து கொண்டு வந்து கூட்டினைத் தயார் செய்வதாகும்.


உணர்வு


பன்றிகளுக்கு 310 கோண அகலப்பரப்பு காட்சித்திறனைக் கொண்டுள்ளன. மேலும் 35° ல் இருந்து 50° வரை இருகண் நோக்கி பார்வையில் காட்சிகளை அவற்றால் காண முடியும். இத்தகைய தகவமைப்பு மற்ற விலங்கினங்களில் கானப்படுவதில்லை. ஆடு போன்ற விலங்குகள் தூரக்காட்சிகளை தங்களது தலையை உயர்த்தி பொருட்களைப் பார்க்கின்றன.


வெளி இணைப்புகள்

வீட்டுப் பன்றி – விக்கிப்பீடியா

Domestic pig – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *