பேரரசர் சிறு குரங்கு (emperor tamarin, Saguinus imperator) என்பது ஒரு அரிய முதனி ஆகும். இந்தக் குரங்கின் முகத்தில் அடர்த்தியான மீசை ரோமங்கள் இருக்கும். அரசர்களுக்கு இருப்பது போலவே மீசை இருப்பதால் இவை ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியமின். மீசையோடு உள்ள ஒற்றுமையால் எம்பெரர் டாமரின் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த விலங்கு தென்மேற்கு அமேசான் படுகை, கிழக்குப் பெரு, வடக்கு பொலிவியா, மேற்கு பிரேசில் மாநிலமான ஆக்ரி மற்றும் அமேசான் மாநிலம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
இவற்றின் மார்பு முடிகள் மஞ்சள் கலந்து, பெரும்பான்மையாக சாம்பல் நிறத்தில் இருக்கும். கைகள், கால்கள் போன்றவை கருப்பு நிறத்திலும் வால் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் வெள்ளை மீசையானது நீண்டு இரு தொள்களைத் தொடுமளவு இருக்கும். இவ்விலங்கு 23–26 சென்டிமீட்டர்கள் (9.1–10.2 in) நீளமுடையது, மேலும் 35–41.5 cm (13.8–16.3 in) நீளமான வலை கொண்டிருக்கும். இதன் எடை தோராயமாக 500 கிராம்கள் (18 oz) இருக்கும். இவை எப்போதும் குடும்பமாகவே வாழக்கூடியன. ஒரு குடும்பத்தில் மூன்று முதல் எட்டு விலங்குகள்வரை இருக்கும்.