இளம்பழுப்பு மான்

இளம்பழுப்பு மான் (Dama dama) என்பது செர்விடீ என்று அறியப்படும் மான் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அசைபோடும் பாலூட்டி விலங்கு. இவ்வினம் ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. எனினும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், மொரீசியசு, சீசல்சு தீவு, தென்னாப்பிரிக்கா, அர்ச்செண்டினா, நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் கொண்டுசெல்லப்பட்டது.


தோற்றக்குறிப்பு


வளர்ந்த கலைமான்கள் 140–160 cm (55–63 in) நீளமும், 85–95 cm (33–37 in) உயரமும் (தோள் வரை), பொதுவாக 60–100 kg (130–220 lb) எடையும் கொண்டன; பிணை (பெண்) மான்கள் 130–150 cm (51–59 in) நீளமும், 75–85 cm (30–33 in) உயரமும் (தோள் வரை), 30–50 kg (66–110 lb) எடையும் கொண்டன. பெரிய கலைமான்கள் 190 cm (75 in) நீளமும் 150 kg (330 lb) எடையுடனும் இருந்துள்ளன. குட்டிகள் 30 cm (12 in) நீளமும் 4.5 kg (9.9 lb) எடையும் இருக்கும். ஏறத்தாழ 12–16 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இவை நான்கு விதமான நிறங்களில் காணப்படுகின்றன. வெளுப்பு, இளம் பழுப்பு, அடர் பழுப்பு, கருப்பு நிறம் போன்ற நிறங்களில் உள்ளன.


கலை மான்களுக்கு மட்டுமே கொம்பு உண்டு. முதல் இரண்டு ஆண்டுகள் கிளையிலாமல் இருக்கும் இக்கொம்புகள் மூன்றாம் ஆண்டு அகலமாகவும் பட்டையாகவும் மாறும். புல் மேயும் விலங்குகளான இவை மரங்களுள்ள காடும் திறந்த புல்வெளியும் கலந்திருக்கும் பகுதிகளையே விரும்புகின்றன.


ஆபத்தில் இருக்கும் போது இம்மான்களால் சிறு தொலைவுக்கு அதிகபட்சமாக மணிக்கு 30 மைல் (48 கி.மீ) வேகத்தில் ஓட முடியும். இளம்பழுப்பு மானினால் 1.75 மீ (5.8 அடி) உயரம் குதிக்கவும் 5 மீ (17 அடி) நீளம் வரை தாண்டவும் முடியும்.


வெளி இணைப்புகள்

இளம்பழுப்பு மான் – விக்கிப்பீடியா

European fallow deer – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.