வனப்புமிக்க சிறுமான் (gazelle) என்பது மறிமான் வகைகளில் உள்ள ஓர் இனமாகும். இதில் ஆறு இனங்கள் இரண்டு வகைகளைக் கொண்டு காணப்படுகின்றன.
வனப்புமிக்க சிறுமான்கள் வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகும். இவற்றின் உச்ச வேகத்தில் மணிக்கு 60 மைல் வேகத்தில் (97 கிலோமீட்டர்) ஓடக்கூடியது.