கொரில்லா மனிதக் குரங்கு

கொரில்லா (Gorilla gorilla), மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.


பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால் இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.


வெளி இணைப்புகள்

கொரில்லா – விக்கிப்பீடியா

Gorilla – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.