பேய்க்குரங்கு (Horsfield’s tarsier) என்ற இந்த குரங்கு ஒரு இரவாடி விலங்கு ஆகும். இரவில் மட்டுமே இதனை வெளியில் காணமுடியும். இக்குரங்கை மற்ற குரங்குகளின் மூதாதையர் என்று அழைக்கிறார்கள். இக்குரங்கின் தோற்றம் மற்ற குரங்கை விட வித்தியாசமாக ஆந்தையைப் போல கண்ணும், வௌவாலைப் போல் இதன் காதும், தவளையைப் போல் இதன் கால்களும், குரங்கைப் போன்ற வாலும் கொண்டு அபூர்வ தோற்றத்தில் காணப்படுகிறது. இதன் உயரம் ஒரு சாண் மட்டுமே. இவை தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ நாட்டின் காடுகளில் வாழுகிறது.
வெளி இணைப்புகள்
பேய்க்குரங்கு – விக்கிப்பீடியா
Horsfield’s tarsier – Wikipedia