காஷ்மீர் மான்

காசுமீர் மான் (Kashmir stag), என்பது ஒரு மான் ஆகும். இவை இந்தியாவில் உள்ள காட்டுமானின் கிளையினம். இவை மிக அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. 2008 இல் நடந்த கணக்கெடுப்பின்படி 160 வளர்ந்த மான்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்தது. இப்பான்தான் சம்மு காசுமீர் மாநில விலங்காகும்.


விளக்கம்


இந்த மான் உருவத்தில் சற்று பெரியதாகவும், பிளவுபட்ட கொம்புகளைக்கொண்டும் காணப்படும். ஒவ்வொரு கொம்பிலும் ஐந்து முதல் ஆறுவரை கிளைக்கொம்புகள் இருக்கும். உடல் நிறம் லேசான அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். பிட்டத்தில் வெள்ளைத் திட்டுக் காணப்படும். காசுமீர் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுக்கையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் சிறு குழுக்களாக வாழ்கின்றன.இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 1970இல் 150ஆக குறைந்துவிட்டது.

வெளி இணைப்புகள்

காசுமீர் மான் – விக்கிப்பீடியா

Kashmir stag – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.