குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு.
குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.